×
 

பட்ஜெட் 2025: ரூ.10 லட்சம் வருமானம் வரை வரியில்லை, 25 % புதிய வரி அறிமுகம்?

ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு எந்தவிதமான வருமான வரியும் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கவும், அதேசமயம், புதிதாக 25 சதவீதம் வரி எனும் படிநிலையையும் பட்ஜெட்டில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2025-26 பட்ஜெட்டில், ஆண்டுக்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படலாம் என பிஸ்னஸ் ஸ்டான்ர்ட் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் வரிச் சலுகைகள், வரி விலக்குகல் ஆகியவை அறிவிக்கப்படுமா என வருமானவரி செலுத்துவோர் ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள்.


புதிய வரிவிதிப்பின்படி, ஆண்டுக்கு ரூ.7.75 லட்சம் வருமானம் ஈட்டுவோருக்கு எந்த வரியும் இல்லை, ரூ.75 ஆயிரம் நிரந்தரக் கழிவும் இருக்கிறது. ஆனால், ஆண்டுக்கு ரூ.15 லட்சத்துக்கு அதிகமாக வருமானம் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.


இந்நிலையில் மத்திய நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில் “ நாங்கள் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து வருகிறோம். எங்கள் ஆலோசனைக்கு ஒப்புதல் கிடைத்தால், ரூ.10 லட்சம் வரை  ஆண்டுக்கு வருமானம் ஈட்டுவோர் வரி செலுத்தத் தேவையில்லை, ரூ.15 முதல் ரூ.20 லட்சம் வரை ஆண்டுக்கு வருமானம் ஈட்டுவோர் 25 சதவீதம் வரி செலுத்த வேண்டியதிருக்கும். வருமானவரி சலுகை அளித்தால் ஆண்டுக்கு ரூ.50ஆயிரம் கோடி முதல் ரூ.ஒருலட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்பதையும் அரசு ஆலோசித்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கும்பமேளாவும் அதன் பொருளாதார தாக்கமும்...


உலக வர்த்தக ஆய்வு நிறுவனம்(ஜிடிஆர்ஐ) 2025-26ம் ஆண்டு பட்ஜெட்டில் குறிப்பிட்ட வரிச் சீர்திருத்தங்களை எதிர்பார்க்கலாம். பணவீக்கம் உயர்வுக்கு ஏற்றார்போல் வரிவிலக்கு அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்திய ஜிடிபி(GDP) நடப்பு நிதியாண்டில் 4 ஆண்டுகளில் இல்லாத அளவு குறையும்: என்எஸ்ஓ முதல்கட்ட கணிப்பு...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share