காதலிப்பதாக கூறி பலமுறை சீரழித்த இளைஞன்.. உயிருக்கு போராடும் இளம்பெண்.. ஒருதலைபட்சமாக நடக்கும் போலீஸ்..?
சென்னை தாம்பரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலிப்பதாக கூறி பலமுறை உல்லாசமாக இருந்த காதலன், இளம்பெண் கர்ப்பம் ஆனதும் கலட்டி விடப்பார்ப்பதாகவும் இதுகுறித்து போலீசாரும் வழக்குபதியாமல் அலைக்கழிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் 22 வயதான இளம்பெண் திவ்யா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 2018ம் ஆண்டு திவ்யாவின் அம்மா முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். அவரது அப்பாவோ டிபி நோயால் கடந்த 2019 ஆம் ஆண்டு குரோம்பேட்டை காசநோய் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தாய், தந்தை இருவரையும் இழந்த திவ்யா, தனது தங்கையுடன், தண்டையார் பேட்டையில் உள்ள தனது தாய் வழி பாட்டியின் வீட்டில் தங்கி இருந்து கல்லூரி சென்று வந்துள்ளார். குடும்ப வறுமையை உணர்ந்து பார்ட் டைமாக வேலைக்கும் சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021ல் அதேபகுதியை சேர்ந்த 22 வயதான தினேஷ் என்னும் வாலிபர், இன்ஸ்டாகிராம் மூலம் திவ்யாவுக்கு பழக்கம் ஆகி உள்ளார்.
ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் திவ்யாவும், தினேஷுடன் பேசி வந்தார். நாளடையில் இவர்களது நட்பு நெருக்கமானது. இருவரும் நேரில் சந்தித்து பேசி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் ஒரே வாரத்தில் திவ்யாவை தினேஷ் காதலிப்பதாக கூறியுள்ளான். திவ்யாவோ தனது குடும்ப சூழ்நிலையை எடுத்துக் கூறி உள்ளார். தந்தை, தாயை இழந்து, பாட்டியின் ஆதரவில் கஷ்டப்படும் குடும்பத்தில் காதல் எதற்கு வேண்டாம் என மறுத்துள்ளார். ஆனாலும் விடாப்பிடியாக பின் தொடர்ந்த தினேஷ், திவ்யாவை காதல் வலையில் வீழ்த்தி உள்ளான்.
இதையும் படிங்க: டார்ஜிலிங், ஒடிசாவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா.. சென்னையில் விற்பனை செய்த பெண்கள் உட்பட 7 பேர் கைது..
தினேஷை முழுதாக நம்பிய திவ்யாவும், அவன் அழைத்த இடத்திற்குலாம் சென்றுள்ளார். முதலில் யாருமில்லாத நேரத்தில் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற தினேஷ், நாம் தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறோமே, ஒன்றாக இருந்தால் என்ன தவறு என்பது போல் பேசி, திவ்யாவுடன் உல்லாசமாக இருந்துள்ளான். பின்னர் அதையே வழக்கமாக்கிய தினேஷ், பலமுறை இளம்பெண்ணை தனது இச்சைக்கு இணங்கும்படி செய்துள்ளான். இவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றுவதை பார்த்த திவ்யாவின் மாமா, இருவரையும் அழைத்து கண்டித்துள்ளார். இதையடுத்து தண்டையார்பேட்டையில் இருந்த இவர்களது வீட்டை காலி செய்துவிட்டு தாம்பரத்தில் குடிவைத்தார். தினேஷும், திவ்யாவும் இனி தொடர்பு கொள்ளக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் திவ்யாவும் , தினேஷுடன் பேசுவதையே தவிர்த்துள்ளார். தினேஷும் வேறு பெண்ணை தனது காதல் வலையில் வீழ்த்தி, அவருடன் உல்லாசமாக இருந்துள்ளான். இந்நிலையில் கடந்த 2024ம் ஆண்டு திவ்யாவிற்கு உடல்நலமில்லாமல் போகவே, நலம் விசாரிப்பது போல மீண்டும் பேசத்துவங்கியுள்ளான் தினேஷ். தான் காதலித்த பெண் தன்னை விட்டு போய்விட்டதாகவும், தான் இன்னமும் உனது நினைப்பிலேயே தவிப்பதாகவும் திவ்யாவிடம் மீண்டும் வலை விரித்துள்ளான். திவ்யாவும் அதை நம்பி, மீண்டும் அவனது காதல் வலையில் சிக்கினாள். இதைத் தொடர்ந்து கேரளா, கொச்சினில் ரூம் எடுத்து ஒருவாரம் பலமுறை அந்த பெண்ணை சீரழித்துள்ளான். ஈசிஆர் ,கோவளம், செம்மஞ்சேரி, தண்டையார்பேட்டையில் அவன் வீட்டில் என அவனது சேட்டை தொடர்ந்துள்ளது.
கடைசியாக 2025 ஜனவரியில் 4 நாள்கள் பாண்டிச்சேரியில் ரூம் எடுத்து தங்கி, இளம்பெண்ணுடன் கணவன், மனைவி போல் வாழ்ந்துள்ளான் தினேஷ். பிப்ரவரி மாதம் திவ்யாவிற்கு பிரியட்ஸ் தள்ளிப்போகவே, பயந்து போன திவ்யா வீட்டின் அருகே உள்ள மருத்துவமனையில் கர்ப்பமாக உள்ளேனா என்று சோதனை செய்த போது, பாசிட்டிவாக ரிசல்ட் வந்தது. இதுகுறித்து தினேஷிடம் தெரிவித்த போது தான் அவனது உண்மையான சுயரூபம் வெளியே தெரிந்துள்ளது. திவ்யாவை படுமோசமான கெட்டவார்த்தைகளால் திட்டி, எங்கள் வீட்டில் எல்லாம், உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தொடர்பை துண்டிக்க பார்த்துள்ளான். இளம்ப்பெண்ணை தனிமையில் அழைத்து கருவை கலைக்க முயற்சித்துள்ளான். இதற்கிடையில் தினேஷின் அம்மாவும் அப்பாவும் திவ்யாவை தகாத வார்த்தைகளால் காயப்படுத்தி உள்ளனர்.
தன்னை போல் வேறு எந்த பெண்ணும், தினேஷ் வலையில் விழுந்துவிடக்கூடாது என நினைத்த திவ்யா, இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்க சென்றுள்ளார். ஆனாலும் அவரை தண்டையார்பேட்டை காவல் நிலையம் செல்லுங்கள், இது கிளாம்பாக்கம் லிமிட்டில் வருகிறது அங்கு செல்லுங்கள் என்று அழைக்கழித்துள்ளனர். போலீசாரின் அலைக்கழிப்பில் போலீஸ் ஸ்டேஷனிலியே அவரது கரு கலைந்து, அவர் அணிந்திருந்த சுடிதார் முழுதும் ரத்த கறையாகி உள்ளது. அப்போதும் போலீசார் மனமிறங்கவில்லை. தற்போது கரு கலைந்து விட்டதால் கர்ப்பப்பையை டிஎன்சி முறையில சுத்தப்படுத்த வேண்டும். ஆனால் திருமணம் ஆகாத பெண் என்பதால் மருத்துவர்கள் எஃப்.ஐ.ஆர் பெற்று வரும்படி வலியுறுத்தி உள்ளனர். ஆனால் போலீசார் வழக்குபதியாமல் இழுத்தடித்துள்ளனர்.
வெப்பேரி போலீஸ் கமிஷனரிடம் சென்ற நிலையில், தண்டையார் பேட்டை மகளிர் போலீசில் புகார் அளிக்கும்படி அவர் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி அங்கு சென்றபோது, அங்கிருந்த போலீஸ், நீயும் தானே அவன் கூட சேர்ந்து படுத்த என்கிற ரீதியில் பேசி இளம் பெண்ணை நோகடித்துள்ளார். தினேஷுக்கு ஆதரவாக வந்த வக்கீல், நீ என்ன கேஸ் வேனா கொடு, 2 நாள்ல ஜாமின்ல எடுத்துருவேன் என மிரட்டியுள்ளார். ஆதரவு இல்லாமல் நிற்கதியில் நிற்கும் பெண்ணிற்கு ஆதரவாக போலீசார் களம் இறங்குவார்களா என கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் சென்னை வரும் பிரஷாந்த் கிஷோர்.. இந்த முறை விஜய்யுடன் ஒரே மேடையில் கைகோர்ப்பு.!