×
 

11 நாட்கள் தீப ஜோதி நிறைவு..2668 அடி உயர மலையில் இருந்து இறங்கிய மகாதீப கொப்பரை!

திருவண்ணாமலையில் 11 நாட்கள் தொடர்ந்து எரிந்த மகாதீப கொப்பரை இன்று கோயிலுக்குள் கொண்டுவரப்பட்டது.

திருவண்ணாமலையில் 11 நாட்கள் தொடர்ந்து எரிந்த மகாதீப கொப்பரை இன்று கோயிலுக்குள் கொண்டுவரப்பட்டது.
 
|திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் திரு கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 4-ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில் திருக்கார்த்திகை தீபவிழா 10ம் நாளான 13-ஆம் தேதி அண்ணாமலையார் சன்னதியில் ஏகன்  அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக கோவலில் உள்ள சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மாலை ஆறு மணிக்கு அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை மீது  மகா தீபம் ஏற்றப்பட்டது.   

இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் தீப ஜோதியாக பக்தர்களுக்கு காட்சியளித்து  நிறைவு பெற்றது.  அதனைத் தொடர்ந்து மலை மீது இருந்த கொப்பரை அண்ணாமலையார் கோவிலுக்கு இறக்கப்பட்டு கொப்பரையிலிருந்த மை சேகரிக்கப்பட்டது.

அதனுடன் பல்வேறு மூலிகைகள் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து தீப மை தயாரிக்கப்பட்டு ஆருத்ரா தரிசனத்தின் போது நடராஜருக்கு நெற்றியில் திலகமிட்டு பின்னர் தீப மைய்யினை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: 2025: புத்தாண்டு முதல் நாளில் இதெல்லாம் பார்த்தால், கேட்டால்... நீங்கள் பணக்காரர் ஆவதை தடுக்கவே முடியாது..!

இதையும் படிங்க: ஷேக் ஹசீனாவை நாடு கடத்த அழுத்தம்... இந்தியாவிடம் பூச்சாண்டி காட்டும் வங்கதேசம்... ஒப்பந்தம் அறியாத மக்கா இந்த ‘மாஸ்டர் மைண்ட்’..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share