×
 

காங்கிரஸ்காரங்க இவரை மாதிரி இருக்கணும்..! சசி தரூரைப் பாராட்டிய பாஜக..!

ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து காங்கிரஸ் எம்.பி. சசிதருர் பாராட்டுத் தெரிவித்தார்.

ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து காங்கிரஸ் எம்.பி. சசிதருர் பாராட்டுத் தெரிவித்தார். சசிதருர் வெளிப்படையாக புகழ்ந்ததற்கு பாஜகவும் அவரைப் பாராட்டி காங்கிரஸ் கட்சியினரும் இதுபோல் நடந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தது.

புதுடெல்லியில் கடந்த செவ்வாய்கிழமை “அமைதியை நிலைநாட்டுதல் பின்னால் பார்த்து முன்னோக்கி செல்லுதல்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் உக்ரைன்-ரஷ்யா போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை போரின் தொடக்கத்தில் விமர்சித்தேன், இப்போது அமைதிக்கான அதன் நிலைப்பாட்டை ஆதரிக்கிறேன் எனத் தெரிவித்தார்.

அவர் பேசுகையில் “நான் இப்போதும் வெட்கப்படுகிறேன். ஏனென்றால், 2022, பிப்ரவரியில் உக்ரை-ரஷ்யா போர் தொடங்கியபோது இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் விமர்சித்து கடுமையாகப் பேசியது நான் மட்டும்தான் அதற்காக இப்போது வெட்கப்படுகிறேன். நான் இந்தக் கருத்தை ஒரு இந்தியராகக் கூறுகிறேன், இதில் அரசியல் கலப்பு ஏதும் இல்லை. வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினரான நான், ஐ.நா. சாசனத்தை ரஷ்யா மீறிவிட்டது, எல்லைகளை மீறக்கூடாது என்ற கொள்கையை மீறியது, உக்ரைன் எனப்படும் ஒரு உறுப்பு நாட்டின் இறையாண்மையை மீறியது, சர்வதேச மோதல்களைத் தீர்க்க பலத்தைப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நான் வாத்திட்டிருக்கிறேன்.

இதையும் படிங்க: வாக்காளர் அடையாள அட்டை - ஆதார் இணைப்பு.. முக்கிய முடிவெடுத்த தேர்தல் ஆணையம்.. எச்சரிக்கும் காங்கிரஸ்.!!

அந்தக் கொள்கைகள் அனைத்தும் ஒரு தரப்பினரால் மீறப்பட்டன, அதை நாம் கண்டித்திருக்க வேண்டும். சரி, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது நான் பேசியதை நினைத்தை நான் வெட்கப்படுகிறேன். ஏனென்றால், இரண்டு வாரங்களுக்கு முன் மாஸ்கோவில் உக்ரைன் அதிபரையும், ரஷ்ய அதிபரையும் கட்டிப்பிடித்து இருவராலும் ஏற்கக்கூடிய இந்திய பிரதமர் இருக்கிறார். இதுதான் இந்தியாவின் கொள்கை” எனத் தெரிவித்தார்.

உக்ரை-ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து காங்கிரஸ் மக்களவை தலைவர் ராகுல் காந்தியிடமும் கடந்த 2023, செப்டம்பரில் லண்டனில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு அவர் பதில் அளிக்கையில் “எதிர்க்கட்சி என்ற வகையில், உக்ரைன் ரஷ்யா போரில் இந்தியா எடுத்துள்ள நிலைப்பாட்டை நாங்கள் ஆதிரிப்போம் என்று நினைக்கிறேன். நாங்கள் ரஷ்யாவுடன் நட்புறவு வைத்துள்ளோம், ஆதலால், இப்போதுள்ள அரசின் நிலைப்பாட்டை பற்றி எதிர்க்கட்சிகள் வேறுபட்ட கருத்து வைத்திருக்கமாட்டார்கள்” எனத்தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கருத்துக்கு, பாஜக மூத்த தலைவர் ரவி சங்கர் பிரசாத் வரவேற்றுள்ளார். ரவி சங்கர் பிரசாத் கூறுகையில் “ரஷ்யா உக்ரைன் போரின்போது தான் பேசிய கருத்துக்கள் சரியல்ல என சசி தரூர் உணர்ந்துவிட்டார். இந்திய அரசின் கொள்கைகள் சரியானவை, தாமதமாக இருந்தாலும் அதுதான் சரி. மோடி அரசு எப்போதுமே தேசத்துக்காக செய்கிறது, இதை சசிதரூர்ஒப்புக்கொண்டார், காங்கிரஸ் தலைவர்களும் இதை ஏற்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

பாஜக எம்.பி. சம்பித் பத்ரா கூறுகையில் “ஐநா அமைப்போடு நீண்ட காலம் தொடர்புடைய சசி தரூர் ராஜங்கரீதியான விஷயங்களை நன்கு அறிந்தவர். காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்களும் மோடிக்கு எதிராகவும், தேசத்துக்கு எதிராகவும்  பேசுவதை தவிர்த்துவிட்டு ம சசி தரூரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி முன்வந்து சசிதரூர் நிலைப்பாட்டை பாராட்ட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
 

இதையும் படிங்க: பாஜகவை அடிச்சே ஆகணும்... இதுமட்டும்தான் வழி... இந்துத்துவாவுக்கு எதிராக ராகுல் எடுத்த அஸ்திரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share