×
 

அஜ்மீர் ஷெரீப் தர்கா அல்ல... கோயில்! சாதர் கொடுக்க இந்து சேனா பிரதமர் மோடிக்கு கடும் எதிர்ப்பு..!

அஜ்மீர் ஷெரீப்பில் பிரதமர் சார்பில் சாதர் வழங்குவதற்கு இந்து சேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி 11வது முறையாக அஜ்மீர் ஷெரீப் தர்காவில் சாதர் வழங்குகிறார். மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஜனவரி 4 ஆம் தேதி குவாஜா மொய்னுதீன் சிஷ்டியின் தர்காவில் சாதர் வழங்குகிறார். இதனிடையே, அஜ்மீர் ஷெரீப்பில் பிரதமர் சார்பில் சாதர் வழங்குவதற்கு இந்து சேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த தர்கா உண்மையில் சங்கட் மோகன் மகாதேவ் கோவில் என்று அவர்கள் கூறுகின்றனர். அந்த அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா, தர்கா-கோயில் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வரை தர்காவில் பிரதமர் சார்பில் சாதர் வழங்கும் நிகழ்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலக முதன்மை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

க்வாஜா மொய்னுதீன் சிஷ்டியின் வருடாந்திர உர்ஸ் அஜ்மீர் ஷெரீப்பில் டிசம்பர் 28 முதல் தொடங்கியது. கடந்த முறையும் காவி நிறத்தில் இருந்த தர்காவுக்கு பிரதமர் மோடி சாதரை அனுப்பி இருந்தார். அப்போது பாஜக சிறுபான்மை மோர்ச்சாவின் ராஜஸ்தான் மாநிலத் தலைவர் ஜமால் சித்திக், பிரதமர் சார்பில் தர்காவில் சாதர் வழங்கினார். அதற்கு முன், பிரதமர் மோடியின் சார்பில் அப்போதைய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி சாதர் வழங்க செல்வது வழக்கம்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் - சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்.. கைதான சௌமியா.. கொதித்தெழுந்த அன்புமணி ராமதாஸ்..

இம்முறை பிரதமர் சார்பாக மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அஜ்மீர் ஷெரீப் நகருக்குச் செல்கிறார். அவர் தர்கா இணையதளம், கரிப் நவாஸ் செயலியை தொடங்கி வைக்கிறார்.

அஜ்மீர் ஷெரீப்பில் பிரதமர் மோடியின் 'சாதர்' வழங்குவதற்கு இந்து சேனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்து சேனாவின் தேசிய தலைவர் விஷ்ணு குப்தா பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதி, பிரதமர் இதை செய்யக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். முதன்மை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், குப்தா, சங்கத் மோகன் மகாதேவ் மந்திருக்கு எதிராக அஜ்மீர் தர்கா குவாஜா சாஹேப் வழக்கில் மனுதாரர் என்றும், அஜ்மீர் மேற்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் சவுகான் வம்சத்தால் கட்டப்பட்ட அஜ்மீர் ஷெரீப்பில் பழமையான இந்து சிவன் கோவில் உள்ளது என்பதற்கான போதிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக அவர் கடிதத்தில் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில், அஜ்மீர் தர்கா ஷெரீப் வளாகம் முழுவதையும் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விவகாரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை பிரதமர் தர்காவில் சாதர் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். குப்தாவின் மனு ஜனவரி 24ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க: பெண்கள் பாதுகாப்பு பற்றி பாஜக பேசலாமா ..? துரை வைகோ பளீர் ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share