பிரியங்காவின் கன்னங்களைப் போன்ற பளபளப்பான சாலை: டெல்லி பாஜக வேட்பாளரின் 'கவர்ச்சி' வாக்குறுதியால் சர்ச்சை ; காங்கிரஸ் பதிலடி
பிரியங்காவின் கன்னங்களைப் போன்ற பளபளப்பான சாலை
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா" காந்தியின் கன்னங்களைப் போன்ற சாலை அமைப்பேன்" என்று, டெல்லி" பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி "கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதி அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாஜகவின் "உண்மையான முகம் வெளிவந்துவிட்டது"என காங்கிரஸ் கட்சி அவருக்கு பதிலடி கொடுத்துள்ளது.
வருகிற பிப்ரவரி மாதம் டெல்லி சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் முன்பே அங்கு முக்கிய அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டு வருகின்றன.
நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில், கல்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரும் முதல்வருமான அதிஷியை எதிர்த்து பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி போட்டியிடுகிறார். இவர் இதற்கு முன்னர் 3 முறை எம்எல்ஏ-வாகவும், 2 முறை எம்பியாகவும் இருந்துள்ளார்.
ரமேஷ் பிதுரி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையில், “பீகார் மாநில சாலைகளை நடிகை ஹேமமாலினியின் கன்னங்களைப் போல் பளபளப்பாக ஆக்குவேன் என்று லாலு பிரசாத் யாதவ் முன்னர் உறுதியளித்தார். ஆனால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை.
ஆனால், இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றால் டெல்லி ஓக்லா மற்றும் சங்கம் விஹார் பகுதிகளில் உள்ளசாலைகளை உருவாக்கியதைப் போன்று கல்காஜி தொகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போல் பளபளப்பாக ஆக்குவேன் என்று உறுதியளிக்கிறேன்" என்றார்.
பிரியங்கா காந்தி குறித்த அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியினர் "இது வெட்கக்கேடான செயல்"என்று விமர்சித்து, பாஜகவின் தரம் தாழ்ந்த மனநிலை பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் தளப் பதிவில், “பிரியங்கா காந்திக்கு எதிரான ரமேஷ் பிதுரியின் கருத்து மிகவும் வெட்கக்கேடானது. இதுதான் பாஜகவின் உண்மை முகம். பெண்களுக்கு எதிரான இதுபோன்ற பேச்சுமற்றும் சிந்தனையின் தந்தையே பிரதமர் மோடிதான். அவரே, பெண்களுக்கு எதிராக 'மாங்கல்யம்' மற்றும் 'முஜ்ரா' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவார். இந்த மோசமான பேச்சுக்காக ரமேஷ் பிதுரி மன்னிப்பு கேட்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
ரமேஷ் பிதுரிக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் , “இந்த தவறான நடத்தை ரமேஷ் பிதுரி என்ற மலிவான மனிதனின் மனநிலையை மட்டும் பிரதிபலிக்கவில்லை. அவருடைய உரிமையாளர்களின் யதார்த்தத்தை வெளிக்காட்டுகிறது. பாஜகவின் இத்தகைய கீழ்த்தரமான பேச்சு
மூலம் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் மதிப்பினை நீங்கள்
கண்டுகொள்ளலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஹேம மாலியின் கன்னங்கள்
ஆனால் ரமேஷ் பிதுரி தனது கருத்தை மீண்டும் ஆதரிக்கும் வகையில்" பீகார் மாநிலத்தில் ஒரு முறை லாலு பிரசாத் யாதவ் நடிகை ஹேமா மாலினியின் கன்னங்களைப் போல் சாலைகளை மிருதுவாக அமைப்பேன்" என்று பேசியதை நினைவூட்டினார்.
"எனது பேச்சால் வேதனை அடைவதாக சொல்லும் அவர்கள் (காங்கிரஸார்) ஹேமாஜி பற்றி என்ன சொல்வார்கள்? பிரபலமான நடிகை ஹேமமாலினி தனது திரைப்படங்களின் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். எனவே லாலுவின் கருத்து தவறு
என்றால் என்னுடைய கருத்தும் தவறாக இருக்கலாம்" என்று அவர் மேலும் கூறினார்.
இதையும் படிங்க: அரவிந்த் கெஜ்ரிவாலுடன் மோதும் பர்வேஷ் வர்மா: ஆம் ஆத்மியை முந்திய பாஜக... வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!