ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடப்போவது யார்? - திமுக வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக V.C.சந்திரகுமார் போட்டியிடுவார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளரை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக வேட்பாளர் அறிவிப்பு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக V.C.சந்திரகுமார் போட்டியிடுவார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது.
திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளராக உள்ள V.C.சந்திரகுமார் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2011 முதல் 2016 வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான திருமகன் ஈவெரா, கடந்த 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததால், இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இடைத்தேர்தலில் போட்டியிட்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி, திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி உயிரிழந்தார்.
ஒதுங்கிக்கொண்ட காங்கிரஸ்:
இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி வாக்குப்பதிவும், பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட உள்ளது யார் என்பதை திமுக அறிவித்துள்ளது.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கடந்த 2 முறை இந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் இந்த முறை போட்டியிடவில்லை என அறிவித்திருந்தார். இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளரை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.