×
 

செல்வப் பெருந்தகைக்கு செக் வைக்கும் திமுக தலைமை...டி.கே.சிவகுமார் மூலம் ராகுலுடன் பேச்சு...

கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகும் முயற்சியை உளவுத்துறை மூலம் அறிந்த திமுக தலைமை, அந்த முயற்சியில் ஈடுபடும் தமிழ்நாடு தலைமைக்கு செக் வைக்கும் விதமாக டிகேஎஸ் சிவகுமார் மூலம் ராகுல் சம்மதத்தை பெற திமுக முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து 2014ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட காங்கிரஸ் 2016 ஆம் ஆண்டு மீண்டும் திமுக அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டது. 2016-ஆம் ஆண்டு திமுக அணியில் காங்கிரஸ் மட்டுமே போட்டியிட்டது. ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகு 2018 ஆம் ஆண்டு திமுக தலைமைக்கு ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு மக்கள் நல கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் திமுக அணிக்குள் வந்தன.

 அந்த நேரத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த நிலையில், மாநிலத்தில் அதிமுக கூட்டணிக்கு எதிராக கடுமையான ஒரு விமர்சனம் இருந்து வந்தது. பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் சமூக நீதிக் கூட்டணி என்று திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மதிமுக, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்தன. 2019 ஆம் ஆண்டு இந்த அணிகள் ஒரு பக்கமும், அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக ஒரு பக்கமும் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர்.

இதையும் படிங்க: ‘ஒரு நாடு, ஒரு கட்சி’ என்பது 140 கோடி மக்கள் மீது திணிக்கப்படுகிறது: மல்லிகார்ஜூன கார்கே காட்டம்

இதில் மத்திய அரசுக்கு எதிரான கடுமையான கோபத்தில் இருந்த வாக்காளர்கள், அந்த கோபத்தினால் உடனிருந்த அதிமுகவை சேர்த்து தண்டித்தனர். அந்த தேர்தலில் திமுக கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பின்னரும் அதே கூட்டணி அப்படியே தொடர்ந்தது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதே அணிகள் இரண்டு திசையிலும் நின்று போட்டியிட்டன. இம்முறை திமுக தன்னுடைய கூட்டணி கட்சிகளை வசமாக பழிவாங்கியது என்று சொல்லலாம். அவர்களுக்கு மாற்று வழி இல்லாத நிலையில் அனைவருக்கும் மிக குறைவான எண்ணிக்கையில் சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கியது திமுக.

வேறு வழியில்லாமல், மாற்று வழியும் இல்லாததாலும் திமுக அணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டனர். இதில் காங்கிரசுக்கு மிக பலத்த அடி என்று சொல்லலாம். 60 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நின்ற காங்கிரஸ், 25 தொகுதிகளுக்குள் முடக்கப்பட்டது. வேறு வழி இல்லாமல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து வந்தது. இதற்கு முக்கிய காரணம் மத்தியில் காங்கிரஸிற்கு திமுக ஆதரவு கொடுப்பதும் ராகுல் காந்தி-ஸ்டாலின் நட்பும் முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் காங்கிரஸ் கட்சியினால் எதையும் யோசிக்க முடியவில்லை என்கிற நிலையில் தான் செல்வப் பெருந்தகை காங்கிரஸ் கமிட்டியின் தலைமை பதவிக்கு வந்தார்.

செல்வபெருந்ததை காங்கிரஸ் தலைவர் கார்கேக்கு நெருக்கமானவர். செல்வ பெருந்தகை காங்கிரஸ் தலைவராக வந்தபின் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டது. செல்வ பெருந்தகை திமுகவிற்கு எந்த வகையிலும் ஒத்து வர மாட்டார், மற்றது காங்கிரஸ் தலைவர்கள் போல் அவர் அல்ல தனித்துவமாக சிந்திக்க கூடியவர் என்றெல்லாம் விமர்சனம் வைக்கப்பட்டது. ஆனாலும் கட்சியின் டெல்லி தலைமை திமுகவுக்கு ஆதரவாக இருந்ததால் செல்வ பெருந்தகையால் எதுவும் செய்ய முடியவில்லை. டெல்லி தலைமைக்கு ஏற்ப அவரும் திமுகவுடன் ஒத்துப்போக ஆரம்பித்தார்.

இந்த நிலையில் 2024 பாராளுமன்ற தேர்தல் வந்த போது செல்வபெருந்தகை கூடுதலாக காங்கிரஸுக்கு தொகுதிகள் கேட்டு பெற வேண்டும், அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு நாம் உதவி புரிந்தோம், நாம் ஆட்சிக்கு வருவதற்கு பழைய பாணியில் 20 தொதிகளுக்கு மேல் நாம் பெறவேண்டும் என்று டெல்லி தலைமையில் பேசி ஒப்புதலும் பெற்றார். தேசிய தலைவர் கார்கேவும் அதற்கு முழு சம்மதம் தெரிவித்தார். இதை செல்வபெருந்தகைக்கு ஆகாத மற்ற காங்கிரஸ் தலைவர்கள் மூலம் தெரிந்து கொண்ட திமுக தலைமை அதற்கு ஏற்ப இயங்கியது.  5 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று ஆரம்பித்தது திமுக. இதனால் காங்கிரஸ் தலைமை அதிர்ச்சி அடைந்தது. பேச்சுவார்த்தைக்கு வர இருந்த கார்கே சென்னை வருகையை தள்ளிப் போட்டார்.

திமுக கூட்டணிக்குள் எப்படியும் 16 தொகுதிகளாவது வாங்கி விட வேண்டும் என்று காங்கிரஸ் முனைப்புடன் இருந்தது. ஆனால் திமுக கூட்டணிக்குள்ளேயே இருந்த காங்கிரஸ் தலைவர்கள் மூலம் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. செல்ல பெருந்தகை ஒருவர் தான் இதில் பிடிவாதமாக இருக்கிறார், கார்கேவை அவர்தான் இந்த விஷயத்தில் வற்புறுத்துகிறார் என்றெல்லாம் பேசப்பட்டது. திமுக தலைமை உடனடியாக இந்த விவகாரத்தில் ராகுலை பிடித்து காங்கிரஸுக்கு குறைந்த அளவே தொகுதி ஒதுக்க முடியும் என்று கறாராக பேசியது. இந்தியா கூட்டணிக்குள் எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என்பதால் போன முறை நின்ற தொகுதியே கொடுத்தால் வாங்கி கொள்வோம் என்று காங்கிரஸ் சமாதானத்திற்கு ஒத்து வந்தது.

விசிகவும் 5 தொகுதிகள் கேட்டு மூன்று தொகுதிகளாக குறைத்து, அதில் ஒரு தொகுதி பொது தொகுதி கேட்டது. அதையும் திமுக தர மறுத்து இரண்டு தனி தொகுதிகள் தான் தருவோம் என்று விசிகாவையும் ஓரங்கட்டி வைத்தது. இந்த பிரச்சனை இன்றலவும் திமுக கூட்டணிக்குள் இருந்து வருகிறது. அதே நேரத்தில் திமுக தலைமை தமது கூட்டணியை வெல்ல வைப்பதற்காக சகல முயற்சிகளையும் எடுத்து அதில் வெற்றியும் பெற்றது என்று சொல்லலாம். அதிமுக ஒன்றுமே இல்லை பாஜக தான் அடுத்த இடத்தில் உள்ள கட்சி, இரண்டாவது பெரிய கட்சியாக பாஜக வரும் என்றெல்லாம் பரப்புரைகள் செய்யப்பட்டு, அது முக்கிய காட்சி ஊடகங்கள் மூலம் திணிக்கப்பட்டது.

இதன் விளைவாக அதிமுகவின் வாக்குகள் பாஜக பக்கம் சிதறடிக்கப்பட்டது. வாக்குகள் சிதறியதால் 100% வெற்றியை திமுக கூட்டணி பெற்றது. காங்கிரஸும் மத்தியில் 100 தொகுதிகளை வென்றது. இதனால் திமுக, காங்கிரஸ் தலைமையிலான நட்பு இறுகியது. காங்கிரஸ் கூட்டணியில் பாராளுமன்றத்தில் திமுக 22 எம்பிக்களை வைத்துள்ளதாலும் ராஜ்ய சபாவில் அதிக எண்ணிக்கையில் திமுக எம்பிக்களை வைத்துள்ளதாலும் காங்கிரசுக்கு அது தேவைப்படும் என்பதால் திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் செய்ய வேண்டாம் என்று தலைவர்கள் அடக்கி வைக்கப்பட்டனர்.

இதெல்லாம் நடந்து கொண்டிருந்த பொழுது திடீரென விஜய் களத்திற்கு வந்தார். விஜய் கட்சி ஆரம்பித்து ஆட்சியில் பங்கு அதிகார பகிர்வு என்று அறிவித்தார். மறுபுறம் பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்று அதிமுக அறிவித்து தெளிவாக நின்றது. இந்த விஷயங்கள் திமுக கூட்டணிக்குள் மன வருத்தத்துடன் இருந்த கட்சிகளுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது. வரும் தேர்தலில் திமுக கூட்டணியை விட்டு விலகலாம் என்கின்ற முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதோ வந்துவிட்டது. மறுபுறம் காங்கிரஸ் கட்சியும் திமுக கூட்டணியை விட்டு வெளியில் சென்றால் தான் பழையபடி கூடுதல் எண்ணிக்கையில் நின்று தன்னுடைய செல்வாக்கை நிலை நாட்ட முடியும் என்கின்ற முடிவுக்கு வந்தது.

காங்கிரஸ் தவெகவுடன் இணைந்தால் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற்று  வெல்லலாம், காங்கிரஸ், தவெக, அதிமுக கூட்டணி அமைந்தால் மிகப்பெரிய அளவில் 90 சதவீத இடங்களை கைப்பற்ற முடியும் என காங்கிரஸ் எடை போட்டு வருகிறது. மத்தியில் டெல்லி தலைமையில் இது போன்ற விவகாரங்களில் முட்டுக்கட்டை போட்டு வந்த கே.சி. வேணுகோபாலின் பல் பிடுங்கப்பட்டு, கார்கேவிடம் முழு அதிகாரம் கிடைத்துள்ளது. ஏற்கனவே 2024 பாராளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சியை நடத்தி விதத்தால் கடுப்பில் இருக்கும் கார்கே இதை பயன்படுத்தி மாற்று வாய்ப்பாக இருக்கின்ற தவெகவுடன் இணைந்து முடிந்தால் அதிமுக கூட்டணியை இணைந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடலாம் என்று எண்ணுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே கருத்துடன் இருக்கும் செல்வபெருந்தகையும் அதற்கு ஏற்ப காய் நகர்த்தி வருகிறார். இந்த நிலையில் தான் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ராகுல்-விஜய் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியானது. இந்த தகவல் டெல்லி தலைமை மூலம் செல்வபெருந்தகைக்கு கிடைத்த அடுத்த நாளே விஜய் தலைமையிலான தவெகவை இந்தியா கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்று பகிரங்கமாக செல்வ பெருந்தகை அழைப்பு விடுத்தார். இது கூட்டணியில் பெரிய கட்சியான திமுகவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இது இப்படியே சென்றால் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறினால் மற்ற கட்சிகளும் திமுக கூட்டணிக்கு இருக்க வாய்ப்பு இல்லை. ஆகவே காங்கிரசை கூட்டணிக்குள் தக்க வைக்கின்ற வேலையை செய்ய வேண்டும் என்று திமுக தலைமை யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளேயே இருக்கின்ற திமுக ஆதரவு தலைவர்களும் சில ஆலோசனை வழங்கியதாக காங்கிரஸுக்குள் பேச்சு அடிபடுகிறது.  காங்கிரஸ் டெல்லி தலைமைக்கு பெரும் நிதி ஆதாரமாக இருக்கின்றவர் கர்நாடகாவின் துணை முதல்வராக இருக்கின்ற டி.கே.சிவகுமார். அவரை பிடித்து ராகுல் சோனியாவிடம் அழுத்தம் கொடுங்கள் என அந்த ஆலோசனையில் சொல்லப்பட்டதாம்.

அவர் நினைத்தால் ராகுலிடம் பேசி காங்கிரஸ் கட்சியை திமுக கூட்டணியிலையே நீடிக்க வைக்க முடியும் என்று திமுக தலைமை காங்கிரஸில் உள்ள ஆதரவானவர்களால் சொல்லப்பட்டுள்ளதாகவும், அதை அடுத்து பேச்சு வார்த்தை நடத்த முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக டி.கே.சிவகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகா சென்றால் அது வெளியில் தெரிந்துவிடும் என்பதால் அவரை சந்திக்கும் வகையில்  திருச்சியில் ஒரு விழாவிற்காக அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர் அங்கு வரும்போது அவரை சந்திக்கலாம் என திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

சாரணர் இயக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட டி.கே.சிவகுமாரிடம் திமுக தலைமை சார்பில் இந்த கோரிக்கையை வைக்கப்பட்டு காங்கிரஸை திமுக கூட்டணியிலையே தக்கவைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி.கே.சிவகுமார் சொன்னால் ராகுல் மறுக்க மாட்டார் ராகுல், சோனியா முடிவெடுத்துவிட்டால் கார்கேவால் எதுவும் செய்ய முடியாது வேறு வழியில்லாமல் காங்கிரஸ் திமுக கூட்டணியில் நீடிக்க வேண்டிய நிலை ஏற்படும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்தால் மற்ற கட்சிகளும் வெளியே செல்வதற்கு பயப்படும், இதன் மூலம் அதிமுக தலைமையிலான அணி அமைவதை தடுக்க முடியும் என்று திமுக நினைக்கிறது என்கிறார்கள்.

அதற்காக எந்த வகையிலும் தன்னுடைய முயற்சி கைவிடாமல் திமுக தலைமை செய்து வருகிறது என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதன் காரணமாக நேற்று திருச்சி வந்த டி.கே.சிவகுமாரிடம் தகவல் சொல்லப்பட்டதாகவும், அவரிடமிருந்து பாசிட்டிவான தகவலும் கிடைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திமுக இவ்வாறு இறங்கி வருவதை காங்கிரஸ் தலைமை பயன்படுத்திக்கொள்ளும், நாங்கள் கூட்டணிக்குள் இருக்க வேண்டுமானால் பழையபடி 60 தொகுதிகள் வரை கொடுங்க என்று கோரிக்கை வைக்கலாம், அவ்வாறு கொடுத்தால் மற்ற 4 கட்சிகளும் கூடுதல் தொகுதிகள் கேட்கும் வாய்ப்புள்ளது, மொத்தத்தில் திமுகவுக்கு சட்டமன்ற தேர்தல் 2021 போல் மலர் பாதையாக இருக்காது என விவரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: அலங்கார ஊர்திகளின் வண்ணமிகு அணிவகுப்புடன், 76 வது குடியரசு தின விழா: டெல்லியில், ஜனாதிபதி திரௌபதி தேசியக் கொடி ஏற்றினார்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share