மதுரையில் அரங்கேறிய பயங்கரம்.. திமுக நிர்வாகி வெட்டி படுகொலை..
மதுரையில் திமுக நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தனக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் காளிஸ்வரன். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. என்ன நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ரவுடியான வி கே குருசாமிக்கும் இவருக்கும் பல ஆண்டுகளாக முன்விரோத போக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மதுரை மாநகரில் சுமார் 15-க்கும் மேற்பட்ட கொலைகள் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளிவந்த காளீஸ்வரனை முகமுடி அணிந்து இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் அருவாளால் வட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பாற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மோப்பநாய் உதவியுடன் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போலீசார் சாட்சியங்களை கைப்பற்றினர்.
இதையும் படிங்க: மதுரை மத்திய சிறையில் மோசடி.. ரூ. 1.63 கோடி அளவுக்கு முறைகேடு.. 3 காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்..!
இது குறித்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இந்த கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்றுள்ளதாக தெரியவந்தது. தொடர்ந்து பிரபல ரவுடி ராஜபாண்டியனின் உறவினரான வெள்ளைகாளி என்பவரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என போலீசார் யுகம் கொண்ட நிலையில் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர். முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடியும் திமுக நிர்வாகியும் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் வரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: “எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம்...” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு...!