''நான் தான் அந்த சார்!” பொல்லாத போஸ்டர் அடித்து அதிமுக-வை பொள்ளாச்சியில் பொளக்கும் திமுக.!
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குற்றங்களை பட்டியலிட்டு புகைப்படங்களுடன் பொள்ளாச்சி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குற்றங்களை பட்டியலிட்டு புகைப்படங்களுடன் பொள்ளாச்சி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி “யார் அந்த சார்?” என்ற போராட்டத்தை அதிமுக தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. யார் அந்த சார்? என்ற வாசத்துடன் முதலில் சென்னையில் போராட்டத்தை தொடங்கிய அதிமுக, தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களின் வாகனங்களில் “யார் அந்த சார்?” என்ற ஸ்டிக்கரை ஒட்டி, பட்டி, தொட்டி வரை போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பொள்ளாச்சி முழுவதும் “அதிமுகவில் யார் அந்த சார் ? நான் தான் அந்த சார்!” என அச்சிடப்பட்ட போஸ்டர்களை திமுகவினர் ஒட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: பெரியாரின் நன்மதிப்பை நொறுக்கிட கிரிமினல் உத்தி... அதிமுகவை அழித்திடும் பாசிச சக்திகள்... போட்டுத் தாக்கும் திருமா..!
பரபரப்பில் பொள்ளாச்சி:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களாக யார் அந்த சார் ? என்ற வாசகம் அரசியல் கட்சிகளிடையே பெரும் விவாத பொருளாக உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு பொள்ளாச்சியின் முக்கிய நகர் பகுதிகளான பேருந்து நிலையம் நகராட்சி அலுவலகம் முன்பு,வாட்டர் டேங்க் ரோடு,ராஜா மில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் “அதிமுகவில் யார் அந்த சார் ? நான் தான் அந்த சார்!” என வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
“பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை அரங்கேறிய போது அவர்களை கைது செய்யாமல் வேடிக்கை பார்த்த சார் யார்?”, “தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்து டெல்லிக்கு அடிமை சேவகம் செய்த சார் யார்?”, “பெண் எஸ் பி க்கு பாலியல் வன்முறை நடந்த போது அதை வேடிக்கை பார்த்த சார் யார் ?” போன்று அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற தவறுகளை சுட்டிக்காட்டும் விதமாக பல்வேறு போஸ்டர்கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.
அதிமுகவில் யார் அந்த சார்?
மேலும் ஒவ்வொரு போஸ்டர்களிலும் யார் அந்த சார் ? இவர்தான் அந்த சார் ! என குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் பகிரங்கமாக போஸ்டரில் அச்சடிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், அவர்களின் அரசியல் ரீதியான தொடர்பு உள்ளிட்டவைகளும் புகைப்படங்களாக போஸ்டரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சர்ச்சையை கிளப்பும் போஸ்டர்கள் கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் மணிமாறன் தென்றல் பெயர் வெளியிடப்பட்டதாக அச்சிடப்பட்டுள்ளது.
அதிமுகவிற்கு சிக்கல்:
பள்ளி மாணவர்கள் பயணிக்கும் சாலையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை கவனித்தவாறு பள்ளி மாணவிகள் பள்ளிக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொள்ளாச்சி பகுதியில் பிரதானமாக பொதுமக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலையத்தில் அதிமுகவின் குற்றங்களை சுட்டிக்காட்டி யார் அந்த சார் ? என ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் உடனடியாக மத்திய பேருந்து நிலையத்தில் கிழிக்கப்பட்டுள்ளது.நள்ளிரவில் அதிமுகவின் குற்றங்கள் அடங்கிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டது பொள்ளாச்சி நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இதையும் படிங்க: “நீங்க ஞானசேகரன தொட்டா?... நாங்க சுதாகரை தூக்குவோம்” - அதிமுகவிற்கு டப் கொடுத்த திமுக!