×
 

நினைச்சத பேச நீட் தேர்வு ஒண்ணும் உங்க சினிமா பஞ்ச் டயலாக் இல்ல...! விஜய் எதிர்ப்பை பஞ்சராக்கிய திமுக அமைச்சர்! 

நீட் தேர்வு விலக்கு குறித்து திமுக அரசை விமர்சித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில் அப்போதைய அதிமுக அரசு மிகப்பெரிய குற்றத்தை செய்துவிட்டது போலவும், திமுக ஆட்சிக்கு வந்தால் 100% நீட் தேர்வு விலக்கப்படும் என்று பிரச்சாரம் செய்தனர். தமிழக மக்களுக்கு அதிமுக துரோகம் செய்து விட்டதாகவும், மாணவர்கள் உயிரிழப்புக்கு அரசு தான் பொறுப்பு என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. 

நீட் விலக்கு ரகசியம் எங்களுக்கு தெரியும் ஆட்சிக்கு வந்தவுடன் 100% நீட் விலக்கு வரும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். ஆனால் தேர்தல் முடிந்து அடுத்து 2024 பொதுத்தேர்தல் வரை நீட் விலக்கு பற்றி பேசிவிட்டு தற்போது சட்டமன்றத்தில்  4 ஆம் ஆண்டில் நீட் விலக்கு மாநில அரசின் கையில் இல்லை என முதல்வர் ஒப்புக்கொண்டுள்ளார்.  காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் நீட் விலக்கு கொண்டுவர முடியாது என்பது தெளிவாகியுள்ளது. இந்தியாவின் பெருவாரியான மாநிலங்கள் ஏற்றுக்கொண்ட நீட் தேர்வை ஒரு மாநிலத்துக்காக மாற்ற முடியாது என்பது தான் காரணமே. 

இதனைச் சுட்டிக்காட்டிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே... நம் நாட்டிலே.... என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளைச் சுட்டிக்காட்டி திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021 தேர்தலின்போது, நீட் தேர்வை ரத்து செய்யும்  ரகசியம் தங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து மக்களை நம்ப வைத்தனர்; ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசிற்குத் தான் உள்ளது; மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று கூறுவது மக்களை ஏமாற்றும் செயல்” எனக்குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: நீட் விவகாரத்தில் விஜய் ரியாக்‌ஷன்...எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த.. நாட்டிலே...எம்ஜிஆர் பாடலை சொல்லி பதிலடி...

விஜயின் இந்த கருத்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இன்று வந்துவிட்டு நினைத்ததையெல்லாம் பேச இது திரைப்படம் அல்ல என தவெக தலைவர் விஜய்க்கு, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலளித்துள்ளார். தமிழ்நாடு வளர்ந்திருக்கிறது, முன்னேறியிருப்பதற்கு காரணமே திராவிட இயக்கங்கள்தான் என்றும்,  மத்திய அரசு இப்போது தான் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையை உயர்த்த இலக்கு வைத்து  யற்சித்து கொண்டிருக்கிறது என்பதையும் ஒப்பிட்டுக்கூறியுள்ள அவர், தமிழ்நாடு அந்த இலக்கை எப்போதோ எட்டிவிட்டது. காரணம், தமிழ்நாட்டில் இருந்த திராவிட ஆட்சி தான் என்றார். 

திராவிட இயக்கங்கள் குறித்து குறை சொல்ல எவருக்கும் யோக்கியதை இல்லை என்றும், இன்று வந்துவிட்டு நினைத்ததையெல்லாம் பேச இது திரைப்படம் அல்ல, அரசியல் என்றும் விஜய்யை நேரடியாக சாடியுள்ளார். மக்கள் பிரச்சினைக்காக போராடிய இயக்கம், இரத்தம் சிந்திய இயக்கம் இன்று ஆட்சியில் இருக்கிறது எனில் மக்கள் உணர்வை புரிந்துகொண்ட காரணத்தினால்தான். 

நீட் தேர்வு இருக்கும்வரை அதை எதிர்த்து திமுக போராடும்.

 இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் சட்டமன்றத்திலேயே தெரிவித்துள்ளார் என்றார். 
 

இதையும் படிங்க: நீட் விலக்கில் கைவிரித்த திமுக... ரகசியம் தெரியாமலே உதய் விட்ட உதார் வாக்குறுதி... விவாதம் கிளப்பிய விஜயின் ஒற்றை ட்வீட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share