திமுக வேட்பாளருக்கு ஆராத்தி எடுக்க கியூகட்டி நின்ற பெண்கள்... உ.பி.க்கள் விநியோகித்த '200 ரூபாய்' ..!
இவரை எதிர்த்து சுயேட்சை வேட்பாளர்களும், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமியும் களம் கண்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சந்திரகுமார் போட்டியிடுகிறார். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் நடைபெற்ற விளவங்கோடு, விக்கிரவாண்டி, ஈரோடு கிழக்கு ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் அபார வெற்றி பெற்றது. அதே முனைப்போடு ஈரோடு கிழக்கை வெல்ல திமுக தீயாய் வேலை செய்து வருகிறது. இவரை எதிர்த்து சுயேட்சை வேட்பாளர்களும், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமியும் களம் கண்டுள்ளனர்.
இதனிடையே, ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பண பலமும், அதிகார பலமுமே வெற்றி பெறும் என்பதால், தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக, பாஜக மற்றும் தேமுதிக அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் தற்போது இருகட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வீதி வீதியாக வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்களை அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: அட.. அந்த செந்தில் முருகனாப்பா இவரு..? ஈரோட்டில் சுயேட்சையாக களமிறங்கி கிச்சுக் கிச்சு மூட்டும் அதிமுக பிரமுகர்..!
இன்று அம்பேத் நகர் பகுதியில் வாக்கு சேகரிக்க வரவிருந்த திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஆரத்தி எடுப்பதற்காக ஏராளமான பெண்கள் கையில் ஆரத்தி தட்டுடன் காத்திருந்தனர். வேட்பாளர் வருகைக்காக காத்திருந்த பெண்களுக்கு 200 ரூபாய் வீதம் பணம் விநியோகித்ததாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: 'சீமான் ஈரோட்டில் கால் வைக்கக்கூடாது...' கேட்டைப்போடும் பெரியார்-அம்பேத்கர் கூட்டமைப்பு..!