×
 

திமுகவோட அரசியல் நாடகத்தை இனி நம்ப மாட்டாங்க.. லெப்ட் ரைட் வாங்கிய அண்ணாமலை..!

மோசடியில் ஈடுபடும் திமுகவின் அரசியல் நாடகங்களை இனி தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

100 நாள் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 4 மாதமாக சம்பளம் வழங்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருவதாகவும், இதேபோல் கல்வி நிதியை வழங்காமல் மத்திய அரசு தாமதம் செய்வதாகவும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பல்வேறு இடையூறுகளை மத்திய அரசு ஏற்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். அமைச்சரிடம் மனு அளித்தும் பதிலளிக்கவில்லை என்பதால் மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்து பிரதமர் மோடியின் செவிகளுக்கு விழும்வரை எங்களது போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விருது நகர் மாவட்டத்தில், கிராமசபைக் கூட்டம் என்று கூறி பொதுமக்களை வரச் சொல்லி, திமுக நடத்தும் போராட்ட நாடகத்தில் பங்கேற்க வைக்க அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் முயற்சித்து இருப்பதாக கூறியுள்ளார். அங்கிருந்த அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் மீனா இது குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதும், உடனடியாக அங்கிருந்து அமைச்சர் சென்றதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கூட்டணிக்கு அதிமுக வைத்த டிமாண்ட்.. டெல்லிக்கு அழைத்த அமித் ஷா... அண்ணாமலை ஆட்டம் க்ளோஸ்..?

கடந்த நான்கு ஆண்டுகளில், நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு நாட்டில் அதிகபட்சமாக தமிழகத்திற்கு, 39,339 கோடி ரூபாய் வழங்கியுள்ளதை தமிழக மக்கள் அறிவார்கள் என்றும், தமிழகத்துக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ள விவரங்களை, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெளிவாகக் கூறியிருக்கிறார். ஆனால், அந்த நிதி என்ன ஆனது என்பதைக் கூறாமல் மோசடி நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக என்று குற்றம்சாட்டினார்.

தமிழகத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் திமுக ஆதரவோடு நடக்கும் மோசடிகள் குறித்துப் பல முறை புகார் அளித்துள்ள நிலையில், தொடர்ந்து மோசடியில் ஈடுபடும் திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் நம்பப் போவதில்லை என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக நிறுவனத்திற்கு திறப்பு விழா நடத்தியதே விஜய்தான்- டாராகப் பொளந்த அண்ணாமலை

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share