×
 

பெரிய மன உளச்சலா இருக்கு... 'பானை'யை உடைச்சிடாதீங்க..! திருமா வேதனை

மொத்தத்தில் பொங்கி வரும் நேரத்தில் 'பானையை' உடைத்து விடாதீர்கள் என விசிக கட்சி இரண்டாம் கட்டத் தலைவர்களிடம் மன்றாடி கேட்டுக் கொண்டுள்ளார் திருமவளவன்.

''தி.மு.க கூட்டணியிலேயே இருந்து அதிக தொகுதிகளை பெறுவோம் என்பதைத்தான் எங்கள் தலைவர் திருமா சொல்லி இருக்கிறார். 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 இடங்களில் போட்டியிட்ட வி.சி.க இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளில் நிற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்'' என பேட்டி அளித்திருந்தார் விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி. 

இந்நிலையில், விரக்தியுடன் நேரலையில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ''அங்கீகாரம் பெற்று விட்ட நிலையில் அதை தக்க வைப்பதும், அதற்கு மேலே அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதும் இதுவரை எதிர்கொண்ட சவால்களை விடவும் மிகப் பெரும் சவால். அமைப்பாய் திரள்வோம்... அங்கீகாரம் பெறுவோம். மூன்றாவதாக அதிகாரம் பெறுவோம் என்று நாம் அந்த முழக்கத்திலே பதிவு செய்து இருக்கிறோம்.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் வீடு தாக்குதல் விவகாரம்.. திமுக மீது களங்கம் ஏற்படுத்த சதி.. திருமாவளவன் ஆதங்கம்!!

அதிகாரத்தை பதிவு கொள்வது, அதிகாரத்தை வென்றெடுப்பது கட்சியின் நன்மதிப்பில் அடங்கி இருக்கிறது. முன்னணி தலைவர்கள் பேசுகிற பேச்சு, எழுதுகிற எழுத்து, நடந்து கொள்கிற அணுகுமுறையில் ஒருவரை ஒருவர் அரவணைத்து செல்கிற பாங்கில் பிற கட்சியினரோடு இணங்கி செயல்பட வேண்டும்.

இவையெல்லாம் சேர்ந்துதான் அதிகாரம் வெல்வோம் என்கிற இலக்கை அடைய முடியும். எனவே இதை எல்லாம் இயக்கத் தோழர்கள் கவனத்தில் கொண்டு வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். வீணான விவாதங்களில் பங்கேற்க கூடாது. உள்நோக்கத்தோடு youtube சேனலுக்கு, சேனல்களின் விவாதிகழ்ச்சிகளுக்கு போய் பங்கேற்கக் கூடாது. இந்த youtube சேனலில் பேட்டி கொடுப்பதனால் பெரிய சாதனைகளைப் படைத்து விட்டோம் என்று எண்ணி விடவும் கூடாது. அதெல்லாம் தற்காலிகமானது'' எனத் தெரிவித்துள்ளார். 

மொத்தத்தில் பொங்கி வரும் நேரத்தில் 'பானையை' உடைத்து விடாதீர்கள் என விசிக கட்சி இரண்டாம் கட்டத் தலைவர்களிடம் மன்றாடி கேட்டுக் கொண்டுள்ளார் திருமவளவன்.

இதையும் படிங்க: லெப்டில் கைபோட்டு ரைட்டில் திரும்பும் திருமா..! டாஸ்மாக் ஊழல் பாஜக போராட்டத்திற்கு ஆதரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share