×
 

திராவிட மாடல் ஆட்சி ..வார்த்தைக்கு பின்னால் இருக்கும் சரித்திரம் ..மேடையில் புட்டுப்புட்டு வைத்த திமுக எம்.பி கனிமொழி

திராவிட மாடல் ஆட்சி என்பது பலருக்கு பிடிக்காத வார்த்தையாக உள்ளது. இந்த வார்த்தைக்கு பின்னால் இருக்கும் சரித்திரத்தை புரிந்து கொள்ள வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்

சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டரணி சார்பில் இளம்பெண்கள் பாசறை கூட்டம் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவை அரங்கில் நடைபெற்றது. இதில்  திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.  நிகழ்ச்சியில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை வேலு, கருணாநிதி உள்ளிட்டரும் மகளிர் அணி உறுப்பினர்களும், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன், வழக்கறிஞர் மதிவதனி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய கனிமொழி கருணாநிதி,திராவிட மாடல் ஆட்சி என்பது பலருக்கு பிடிக்காத வார்த்தையாக உள்ளது. இந்த வார்த்தைக்கு பின்னால் இருக்கும் சரித்திரத்தை புரிந்து கொள்ள வேண்டும்.பெண்களுக்கு வாக்குரிமை போராடி பல நாடுகளில் பெரும் பாதிப்புக்கு பெண்கள் உள்ளானார்கள். இதற்கு பின் தான் ஓட்டு போடும் உரிமை கிடைத்தது. 1911 க்கு பிறகு தான் பல முன்னேறிய நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.நீதிக்கட்சியில் இருந்து தொடங்குவது தான் திராவிட கட்சி. அது கோரிக்கையை ஏற்று இந்தியாவிலேயே முதல் மாகாணமாக பெண்கள் வாக்களிக்க உரிமை அளித்தது.கண்ணகி பற்றி பேசுகிறோம் அவள் தன் கணவனுக்கு என்று போராடினால் ஆனால் தனக்கு என்று போராடவில்லை.நீங்கள் அத்தனை பேரும் பெரியாரை படிக்க வேண்டும், பெரியாரை தவிர பெண் விடுதலை பற்றி பேசிய தலைவர்கள் யாரும் இல்லை. எல்லா தடைகளையும் உடைத்து முன்னேறுங்கள் என்று சொன்னவர் பெரியார்.பெரியாரை சொன்னால் தனக்கு அடையாளம் கிடைக்கும் என்று அயோக்கியன் என்று கூட கொச்சையாக பேசுகிறார்கள்.அந்த மேடையில் ஏறி பேச தடம் வகுத்து கொடுத்தவர் பெரியார் தான்.சமூகத்தில் உங்களுக்கு பேச வாய்ப்பு அளித்ததற்கு காரணம் பெரியார் தான் மேடையில் ஏறும் போதே பெரியாருக்கு தலை வணங்கி தான் செல்ல வேண்டும்.எல்லா சமூகத்தினரும் படிக்க கூடிய வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று கொண்டு வந்தவர் பெரியார் தான்.பெண்களுக்கு சொத்துரிமை, பெண்கள் படிக்க வேண்டும் என்பது பெரியார் கனவு என்றார் .

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கனிமொழி கருணாநிதி,சௌமியா அன்புமணி வெளி மாநில பிரச்சினைகளுக்கு கனிமொழி போராட்டம் நடத்தினார், ஆனால் தமிழ்நாட்டு பிரச்னைக்கு குரல் கொடுக்கவில்லை என்று பேசியது தொடர்பான கேள்விக்கு,மணிப்பூர் போன்ற மாநிலங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை. பிரதமர் மோடி நேரில் சென்று என்ன என்று கூட கேட்கவில்லை.
ஆனால், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ஒரு பெண் பாதிக்கப்பட்டு உள்ளார் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளி கைது செய்யவும் பட்டிருக்கிறார். இப்போது நீதிமன்றத்தில் வழக்கு சரியாக நடத்தப்பட்டு குற்றவாளிக்கு நியாயமான தண்டனை கிடைப்பதுதான் அந்த பெண்ணுக்கு நியாயம் கிடைத்ததாக இருக்கும். அதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு நானும் கண்டனம் பதிவு செய்தேன். செய்தியாளர் சந்திப்பிலும் தெரிவித்திருந்தேன் இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது இந்த சமூகமே வெட்கி தலைகுனியும்  நிகழ்வு.
முதலமைச்சரும் நடவடிக்கை எடுத்துள்ளார். பொள்ளாச்சியில் நடந்தது போல் நடவடிக்கையை எடுக்காமல் குற்றவாளியை பாதுகாக்கும் நிலை இல்லை குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கு மேல் போராட்டம் செய்வதில் என்ன உள்ளது என்றார்.

யார் அந்த சார் என்று எதிர் கட்சிகள் கேள்வி எழுப்புவது தொடர்பான கேள்விக்கு? இது தொடர்பாக விசாரணை நடந்து கொண்டு உள்ளது காவல் துறையும் குற்றவாளியின் செல் போன் ஏரோபிளேன் மோடில் இருந்ததாக சொல்கிறார்கள். அப்படி ஒருவர் இருக்கிறார்களா இல்லையா என்று விசாரணையில் தான் தெரியும். அண்ணா பல்கலைக்கழக வழக்கை அரசியலாக்க தான் எதிர்கட்சிகள் பார்க்கிறார்கள். முதல் தகவல் அறிக்கை வெளியானதுக்கு காரணம் திமுக அரசு கிடையாது. இணையதள பிழை என்று அவர்களை சொல்லியிருக்கிறார்கள். இதை தமிழக அரசின் மீது குற்றச்சாட்டாக மாற்றுவது நிச்சயம் அரசியலாக இதனை ஆக்குவது தான் என்று கனிமொழி தெரிவித்தார்.


 

 





 

இதையும் படிங்க: எதிர் கட்சிகாரர்களே அந்த பெண்ணிற்கு எதிர்காலம் இருக்கு.. இதில் அரசியல் வேண்டாம்... கனிமொழி எம்பி சாட்டையடி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share