×
 

'ஆடி வராரு கருப்பு ஓடி வராரு...' பக்தியில் காது கடித்த துர்க்கா ஸ்டாலின்… கடுப்பில் பல்லைக் கடித்த ஆ.ராசா..!

நாத்திகமும், ஆத்திகமும் கலந்த கலைவையாக இருக்கும் திமுக தலைமை இந்த இரண்டில் ஏதாவது ஒன்றிலாக சங்கமமே ஆகவில்லை…

நாத்திகம் கடுப்பில் பல்லைக்கடிக்க, ஆத்திகம் பக்தியில் காதை கடிப்பதுமாக நடந்து முடிந்திருக்கிறது சென்னை சங்கமம்.  சென்னை சங்கமம் 2025 - நம்ம ஊரு திருவிழாவின்' இறுதி நாள் அண்ணாநகர் கோபுரப் பூங்காவில் நடைபெற்றது. துடும்பாட்டத்தில் தொடங்கி மல்லர் கம்பம், தெம்மாங்கு பாட்டு, வில்லுப்பாட்டு, வரை கிராமிய பல்சுவை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துர்க்கா ஸ்டாலின், கனிமொழி, பொன்முடி, சேகர்பாபு, ஆ.ராசா உள்ளிட்டோர். அப்போது கருப்பசாமி பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்தனர் நடனக் கலைஞர்கள்.  "ஆடி வராரு கருப்பு ஓடி வராரு..." கருப்பசாமி வேடமிட்டு நடனமாடிய கலைக்குழுவால் பக்தி பரவசமடைந்த பெண்கள் ஆங்காங்கே திடீரென சாமியாட ஆரம்பித்து விட்டனர்.  

இதைக் கண்டு பரவசப்பட்டுப்போன துர்கா ஸ்டாலின் முகமெல்லாம் மலர்ச்சியாக தனதருகில் அமர்ந்திர்ந்த கனிமொழியிடம் காதும் காதும் வைத்ததுமாக தனது மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்தினார். இருக்காதா பின்னே… ''இவங்க கொள்கையில் இவங்க இருக்காங்க. என் பக்தியில் நான் இருக்கிறேன்'' என இருக்கும் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்க்கா சிறு வயதிலிருந்தே பக்தியோடு வளர்ந்து வந்தவர்.திருவெண்காடு முதல் திருப்பதி வரை சென்று பூஜை, புணஸ்காரம் செய்து எப்போதும் பக்தியோடு வளம் வருபவர்.\

இதையும் படிங்க: 2026இல் தீயசக்தி திமுக வேரோடு அழியும்.. பொங்கல் விழாவில் எடப்பாடி பழனிச்சாமி சாபம்!

கடவுள் நம்பிக்கையே இல்லாமல் திராவிட சித்தாந்தத்தை கொண்ட தலைவராக ஸ்டாலினும், தீவிர கடவுள் நம்பிக்கை கொண்ட அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் இருக்கையில் அவர்களுக்குள் எந்த முரண்பாடும் இதுவரை இருந்ததில்லை.திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து துர்கா ஸ்டாலின் அடிக்கடி கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருவது வழக்கம். திமுகவும் ஆத்திகமும், நாத்திகமும் கலந்த கலவைதான். வெளியே நாத்திகம் பேசி கருப்புத்துண்டு போட்டு நாத்திகம் பேசித்திரிந்தாலும், அடுத்த நொடியே கோவில் கருவறைக்குள் கருப்பு சாமி சிலைகளுக்கு முன் பயபக்தியோடு நெடுஞ்சான் கிடையாக குப்புற கவிழ்ந்து கிடப்பார்கள். அப்படி இருக்கும் நிலையில் கருப்பசாமி பாடலால் துர்க்கா ஆனந்தப்படுவதில் ஆச்சர்யமில்லை.

 

மறுபுறம், ஸ்டாலின் அடுத்து பொன்முடிக்கு அருகில் அமர்ந்திருந்த ஆ.ராசா இந்தக் கருப்பசாமி பாடலால் வெறுப்படைந்தார்.பல்லைக் கடிப்பதும், இருக்கையை பிடித்தபடி இறுக்கமாக அமர்ந்திருப்பதுமாக மனுஷன் கடுப்பில் நெழிய ஆரம்பித்தார். ''இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்... சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன். இந்துவாக, இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை, பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்" இந்து என மதம் பற்றி ஏதாவது பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவராயிற்றே தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், எம்.பி.,யுமான ஆ.ராசா..!

இப்படியாக துர்க்கா ஸ்டாலின் பக்தி பரவசத்தில் கனிமொழியின் காதுகடிக்க, கருப்பசாமி பாடலால் ஆ.ராசா பல்லைக் கடிப்பதுமாக இனிதே முடிந்துள்ளது சென்னை சங்கமம். ஆனால், நாத்திகமும், ஆத்திகமும் கலந்த கலைவையாக இருக்கும் திமுக தலைமை இந்த இரண்டில் ஏதாவது ஒன்றிலாக சங்கமமே ஆகவில்லை… வாக்கு அரசியல் இருக்கும் வரை சங்கமம் ஆகப்போவதே இல்லை என்பதே நிதர்சனம்..! 


 

இதையும் படிங்க: தேர்தல் புறக்கணிப்பு ஏன்? எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக அமைச்சர் அர்ச்சணை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share