×
 

மக்கள் மனதில் எடப்பாடி பழனிச்சாமிக்குதான் முதலிடம்.. உரக்கச் சொல்லும் ஆர்.பி. உதயகுமார்.!!

நூறு நாள் வேலை திட்டத்துக்கு திமுக அரசு நிதியை பெற முடியாதது அரசின் நிர்வாக தோல்வியையே காட்டுகிறது என்று தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

மகாத்மா காந்தி ஊரக நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ.4000 கோடிக்கு மேலான  தொகையை மத்திய அரசு விடுவிக்கவில்லை என்று தமிழக அரசு குற்றம் சாட்டி வருகிறது. இதைக் கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை திமுக சில தினங்களுக்கு முன்பு நடத்தியது. இந்நிலையில் நூறு நாள் வேலை திட்டத்துக்கு நிதியைப் பெற முடியாதது தமிழக அரசின் நிர்வாக தோல்வியைக் காட்டுகிறது என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் பூத் கமிட்டி அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசினார். “திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகிவிட்டது. நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம் எங்களிடம் இருக்கிறது என்று சொன்னார்கள். ஆனால், அந்த ரகசியத்தை இதுவரை வெளியிடவில்லை. நீட் தேர்வை ரத்து செய்ய பல லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கியதாகக் கூறினர். அந்த கையெழுத்து குறித்த ரகசியமும் வெளியிடவில்லை. தற்போது நீட் தேர்வு பற்றி கேள்வி எழுப்பினால், உதயநிதி ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டைவிட மிகவும் வேகமாக ஓடுகிறார் என்று சொல்கிறார்கள்.

இதையும் படிங்க: அதிமுக கொடுத்த ஹின்ட்.. அடுத்த பாஜக தலைவர் இவரா..? தூக்கியடிக்கப்படுகிறாரா அண்ணாமலை?

தமிழக மக்கள் தெளிவாக இருக்கின்றனர். மக்கள் மனதில் பழனிசாமிதான் முதலிடத்தில் உள்ளார். அவரின் புகழை திசை திருப்பவும் குழப்பத்தை ஏற்படுத்தவும் ரூம் போட்டு யோசிக்கின்றனர். டெல்லியிலிருந்து நிதி வருவது தாமதமானால் தமிழக அரசு தாராளமாக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கு தன்னுடைய நிதியை வழங்கலாமே.100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் சரியாகக் கணக்கு கொடுக்கவில்லை என்று மத்திய அரசு, திமுக அரசு மீது குறை கூறுகிறது. அதற்கு திமுக அரசு பதில் கூறவில்லை.” என்று ஆர்.பி. உதயகுமார் பேசினார்.

இதையும் படிங்க: டெல்லியில் செங்கோட்டையன் சந்திப்பு விவகாரம்.. பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி தீவிர முயற்சி..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share