எடப்பாடி, சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஒரே அணியில்...தாய் வழி வந்த தங்கங்கள்...போஸ்டரால் பரபரப்பு
ஜெயலலிதா பிறந்த நாளில் சசிகலா, எடப்பாடி, ஓபிஎஸ், தினகரன் எல்லோரையும் ஓரணியில் இணைத்து தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்றால் நாளை நமதே என அடிக்கப்பட்ட போஸ்டரால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சை மாநகர் முழுவதும் ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் ஆதரவாளரான மாநகராட்சி 20வது வார்டு கவுன்சிலர் சரவணன், போஸ்டர் ஒட்டியுள்ளார்.
அதில், தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்றால் நாளை நமதே, 2026 என்ற வாசகங்கள் அடங்கியுள்ளது. அந்த போஸ்டரில் ஜெயலலிதா, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தி வருகிறார்.
இதையும் படிங்க: கண்டெய்னர்களை திறந்து பார்த்த அதிகாரிகள்....அடுத்தடுத்த அதிர்ச்சி...ரூ.6.6 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
இதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லை. சமீப காலமாக அதிமுக மீண்டும் வெல்ல வேண்டுமானால் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்குள் இணைக்கப்பட வேண்டும். ஜெயலலிதா 1989 ஆண்டுக்கு பிறகு அனைவரையும் இணைத்துக்கொண்டார்.
இதே பாணியை எடப்பாடி கையில் எடுக்க வேண்டும். ஓபிஎஸ் அணியை , கே.சி.பழனிசாமி உள்ளிட்ட பலரையும் மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரவேண்டும் என அதிமுகவுக்குள்ளேயே குரல்கள் எழும்ப தொடங்கியுள்ள நிலையில், டிடிவி உள்ளிட்டவர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும், சசிகலாவின் ஆசியை பெற வேண்டும் என கட்சிக்குள் குரல் உள்ள நிலையில், இந்த போஸ்டர்கள் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்த அதிகாரிகள் போல் இருக்காதீர்கள்...நான் அனைத்தையும் கவனிப்பேன்...டென்ஷனான அமைச்சர் கே.என்.நேரு