கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த தேவையில்லை! கர்நாடக அரசின் அவசர சட்டம் சொல்வது என்ன..?
பொருளாதாரரீதியாக நலிவடைந்தவர்கள் கடனை திருப்பி செலுத்த தேவையில்லை என்னும் அவசர சட்டத்தை கர்நாடக அரசு பிரகடனப்படுத்தவுள்ள நிலையில் அம்மாநிலம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பொருளாதார ரீதியாக நலிந்தவர்கள், தனிநபர்கள், சுய உதவிக் குழுக்கள், சிறு, குறு விவசாயிகள் ஆகியோர் பதிவுசெய்யாத, அங்கீகாரமற்ற குறு, சிறு நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கினால் அதை திருப்புச் செலுத்த தேவையில்லை எனும் அவசரச் சட்டத்தை கர்நாடக அரசு அடுத்தஇரு நாட்களில் அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
கர்நாடக சிறுநிதிநிறுவனத் தடுப்பு அவசரச்சட்டம் 2025, வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளநிலையில், அரசில் தரப்பில் பலகட்ட ஆலோசனைகளும்,விரிவான விவாதங்களும் நடத்தப்பட்டுள்ளன. இந்த வரைவு மசோதா அவசரச்சட்டமாகப் பிறப்பிக்கப்பட்டால், அங்கீகாரம் பெறாத, பதிவு செய்யாத நிதிநிறுவனங்கள் கடன் வழங்கியவர்களிடம் இருந்து பணத்தைக் கோர முடியாது, அவர்களைத் தொந்தரவும் செய்யக் கூடாது.
பதிவு செய்யப்படாத நிதிநிறுவனங்கள், ஏஜென்சிகளிடம் இருந்து கடன் வாங்கி அதிகவட்டியை திருப்பிச் செலுத்த முடியாமல், கடன் தொல்லையால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை கர்நாடகத்தில் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, மக்களின் நெருக்கடி அதிகரித்ததையடுத்து, புதிய அவசரச்சட்டத்தை கர்நாடக அரசு பிறப்பிக்க இருக்கிறது.
இதையும் படிங்க: இதுவரை 36 கோடி பேர்..!இன்று மட்டும் 60 லட்சம் பேர்..! கதி கலக்கும் கும்பமேளா வசந்த பஞ்சமி
இந்த வரைவு மசோவில் “அங்கீகாரம் பெறாத, பதிவு செய்யாத நிதிநிறுவனங்கள், ஏஜென்சிகளிடம் இருந்து வாங்கப்பட்ட ஒவ்வொரு கடனும், அதன் வட்டியும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். இந்த விவகாரத்தில் எந்த சிவில் நீதிமன்றமும் தலையிடமுடியாது, வழக்குத் தொடர முடியாது, கடன் வாங்கியவரிடம் இருந்து வட்டியுடன் தொகையைக் கேட்டு அணுக முடியாது. அதேபோல கடன் பெற்றவர்களுக்கு எதிராக கடனை வசூலிக்க தொடரப்பட்டுள்ள வழக்குகள், நிலுவையில் விசாரணையில் இருக்கும் வழக்குகள் முடிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவு மசோதா மாநில சட்டத்துறை அமைச்சர் ஹெ.கே.பாட்டீல் , முதல்வர் சித்தராமையாஆகியோர் தலைமையில் உருவாக்கப்பட்டு ஆளுநர் தவார்சந்த் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. சிறு நிதி நிறுவனங்களின் சொத்து மதிப்பு 2023-24ல் ரூ.42,265 கோடியாக இருக்கிறது, கடன் வாங்கியவர் ஒவ்வொருவரின் சராசரிக்கடன் ரூ.44,36ஆக இருக்கிறது எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அங்கீகரிக்கப்படாத சிறு நிதி நிறுவனங்கள் குறித்தும், அவசரச்சட்டம் குறித்தும் வல்லுநர்கள் கூறுகையில் “ இந்த அவசரச் சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத சிறுநிதி நிறுவனங்கள், லைசென்ஸ்இல்லாத நிறுவனங்களும், கடனை வசூலிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும். நீதிமன்றத்தில் நிச்சயமாக வழக்குத் தொடர்வார்கள் எனத் தெரிவித்தனர்.
இந்த வரைவு மசோதாவின்படி, மாநிலத்தில் செயல்படும் அனைத்து சிறு, குறுநிதி நிறுவனங்கள் அனைத்தும் அரசிடம் பதிவு செய்து அங்கீகார சான்றிதழ் பெற்றபின்புதான் நிதி நிறுவனத்தில் ஈடுபட முடியும். இந்த அங்கீகாரம் பெறும் விண்ணப்பத்தில் எங்கிருந்து நிதி நிறுவனம் இயங்குகிறது, வட்டிவீதம், கடனை எவ்வாறு வசூலிப்பது, வசூலிக்கும் முறை ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தங்களின் அங்கீகாரத்தை, லைலென்சை அரசிடம் புதுப்பிக்க வேண்டும்.
கடன் வாங்கியவர் ஏதேனும் நிதி நிறுவனத்துக்கு எதிராக தெரிவிக்கும் புகாரில் உண்மையிருந்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். கடன் தொடர்பான அனைத்து ஆவணங்களும் கன்னட மொழியில் இருக்க வேண்டும், கடனுக்கான வட்டி எவ்வளவு என்பதை நிறுவனத்தின் அலுவலகத்தில் பெரிதாக வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடம் கன்னடத்திலேயே அலுவல் செய்ய வேண்டும்.
இந்த நிதி நிறுவனங்கள் தொடர்பாக புகார் ஏதேனும் வந்தால், அந்த புகார்களை, துணை கண்காணி்ப்பாளர் அந்தஸ்துக்கு குறைவில்லாத அதிகாரிதான் விசாரிக்க வேண்டும், இந்த அவசரச்சட்டத்தில் குற்றவாளியாக நிரூபிக்கப்படும் ஒருவர் ரூ.5 லட்சம் வரை அபராதமும், சிறை தண்டனையும் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் படுதோல்வி: செம்ம காட்டு காட்டிய ராகுல் காந்தி...!