×
 

‘நானும் மனிதன் தான்: தவறு செய்திருக்கலாம்...’முதல் 'பாட்காஸ்ட்' உரையில் மனம் திறந்த பிரதமர் மோடி..!

இந்த நிகழ்ச்சியில் காமத் சற்று பதட்டத்துடன் காணப்பட்டார். ஆனால், பிரதமர் மோடி இது தனது முதல் பாட் காஸ்ட் அனுபவம் என்பதை தயங்காமல் ஒப்புக்கொண்டார்.

"நான் ஒரு சாதாரண மனிதன் தான்;, நானும் தவறு செய்திருக்கலாம் என தனது இளமைக்கால வாழ்க்கை, அரசியல் குறித்த  2 மணி நேர 'போட் காஸ்ட்' கலந்துரையாடலில் பிரதமர் மோடி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

"பீப்பிள் பை டபிள்யூ எஃப் டி" சேனல் பாட்காஸ்ட் உரையில், 'ஜீரோ டா' இணை நிறுவனர் நிகில் காமத் உடன் பிரதமர் மோடி இன்று மனம் திறந்து பேசினார்.

2 மணி நேரம் நீடித்த விரிவான இந்த கலந்துரையாடலில் மோடியின் இளமைக்கால நினைவுகள்,  மற்றும் அரசியல் குறித்து பிரதமர் மோடி மனம் திறந்து தனது கருத்துக்களை வெளியிட்டார்.

இதையும் படிங்க: "அல்டிமேட் பிக் பாஸ்" : உலகின் வலுவான பிரதமர், நரேந்திர மோடி: பாரதிய ஜனதா பெருமிதம்

பிரதமர் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள், அவருடைய இளமை கால ஆண்டுகள், கல்வி அரசியல் போட்டி, மன அழுத்தத்தை கையாளுதல், எதிர்கொண்ட பின்னடைவுகள்  மற்றும் இடர் மேலாண்மை திறன்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் காமத் சற்று பதட்டத்துடன் காணப்பட்டார். ஆனால், பிரதமர் மோடி இது தனது முதல் பாட் காஸ்ட் அனுபவம் என்பதை தயங்காமல் ஒப்புக்கொண்டார்.

இதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கும் மோடி "நிகில் காமத்துடன் பல்வேறு விஷயங்களை உள்ளடக்கிய ஒரு சுவாரசியமான உரையாடல் பாருங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை காங்கிரஸ் கிண்டல் செய்து இருக்கிறது. "மோடியின் தவறுகளை மூடி மறைக்கும் நிகழ்ச்சி" என, காங்கிரஸ் மூத்ததலைவர் ஜெயராம் ரமேஷ் விமர்சித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’: பாஜக கூட்டணிக்குள் சலசலப்பு: நிதிஷ் கட்சி, ஒய்எஸ்ஆர் கட்சி, எதிர்க்கட்சிகள் சராமரி கேள்வி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share