×
 

இண்டியா கூட்டணிக்கு சம்மட்டி அடி- மக்கள் பாஜகவை விரும்புகிறார்கள்: எடப்பாடி பழனிசாமி..!

டெல்லி தேர்தல் முடிவுகள் மூலம் இண்டியா கூட்டணிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார்கள். இண்டியா கூட்டணி இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது

"2026 தேர்தலில் திமுகவை வீழ்த்தும் நோக்கில் அதிமுக கூட்டணியை அமைக்கும்" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஈரோடு இடைத் தேர்தலில் யாருமே களத்தில் இல்லை. ஆகையால் இது வெற்றி இல்லை. போலி வெற்றி. நாங்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம் என்கிற மமதையில் திமுகவினர் இருக்கிறார்கள். 2026ல் அதே சட்டமன்ற தொகுதியில் என்ன ஏற்படும் என்பதை அந்த காலகட்டம் எடுத்துச் சொல்லும். 2026ல் அதிமுக நிச்சயமாக பலமான கூட்டணியை அமைக்கும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. அதாவது ஐந்தில் ஒரு பாகம் இருக்கிறது. இன்னும் 13 மாத காலம் தேர்தலுக்கு இருக்கிறது. கூட்டணி அமைக்க இன்னும் நாலைந்து மாதம் ஆக வேண்டும்.ஆறு மாதம் போகட்டும். அப்போதுதான் கூட்டணி வடிவத்திற்கு வரும்.

 கூட்டணி என்பது அனைத்து கட்சிகளின் வாக்குகளும் சிதறாமல் அப்படியே பெற வேண்டும். எங்களுக்கு எதிரி திமுக தான். அந்த அடிப்படையில் தான் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். ஸ்டாலினே சொல்லி இருக்கிறார் ''எங்கள் கூட்டணியில் இருக்கிற கட்சிகள் எல்லாம் ஒரே நீர்கோட்டில் இருக்க வேண்டும் ஒரே கொள்கையோடு இருக்க வேண்டும்'' என்று சொல்லி இருக்கிறார். ஒரே கொள்கையை கொண்டிருந்தால் எதற்கு தனி தனியாக கட்சி இருக்க வேண்டும்?

இதையும் படிங்க: மக்களவைத் தேர்தலோடு இண்டியா கூட்டணி அவ்ளோதானா.? சரத் பவார் போட்டாரே ஒரு போடு!

எங்களை பொறுத்தவரை கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காக ஒன்றாக சேர்ந்து உருவாக்கப்படுவது. தேர்தல் முடிந்த பிறகு அவரவர்களின் கொள்கையில்தான் இருக்க வேண்டும்.இப்படித்தான் அந்த கட்சிகள் இருக்க வேண்டும். அப்படித்தான் நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.


 
டெல்லியில் உள்ள மக்கள் பாஜகவை விரும்புகிறார்கள்; அதனால் அவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். டெல்லி தேர்தல் முடிவுகள் மூலம் இண்டியா கூட்டணிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார்கள். இண்டியா கூட்டணி இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது'' என அவர் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: இந்தியா கூட்டணியை அழிக்கிறதா காங்கிரஸ்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share