×
 

கட்டுக்கட்டாய் கோடிக்கணக்கில் பணம் ..போலீசை அலறவிட்ட லாட்டரி நாகராஜ்..!

ஒரு லட்சம் அல்ல இரண்டு லட்சம் அல்ல சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் கட்டு கட்டாய் பணத்தை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள் கோவை கருமத்தம்பட்டி போலீசார்

ஒரு லட்சம் அல்ல இரண்டு லட்சம் அல்ல சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் கட்டு கட்டாய் பணத்தை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள் கோவை கருமத்தம்பட்டி போலீசார்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த எலச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் . 42 வயதான இவர் கேரள எல்லையில் வாலையாற்றில் உள்ள ஒரு லாட்டரி கடையில் வேலை பார்த்து வருகிறார். அங்கிருந்து தமிழ்நாட்டில் கோவை உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்துவந்துள்ளார் .இது குறித்து தகவல் அறிந்து  கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில்  நாகராஜ் வீட்டில் சோதனை நடத்தினர்.

வீட்டில், சாக்கு மூட்டைகளில், பணக்கட்டுகள் இருப்பதை கண்டு, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை இறக்கி, நான்கு பணம் எண்ணும் இயந்திரங்களை கொண்டு, எட்டு மணி நேரம் எண்ணினர். அதில், 2 கோடியே, 25 லட்சத்து, ஆயிரம் ரூபாய் இருப்பது தெரிந்தது. அதில், குறிப்பாக புழக்கத்தில்  இல்லாதா 2,000 ரூபாய் மட்டும் 2 லட்சத்து, 24 ஆயிரம் ரூபாய் இருந்தது.

இதையும் படிங்க: 100 நாள் வேலை ..திட்டத்தை எதிர்க்கும் சீமான் ..வேலை கேட்டு நிற்கும் தாயார்

இதனை அடுத்து நாகராஜை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

இதையும் படிங்க: ரூ.1000 கோடி சொத்து சேர்த்தாரா..? அண்ணாமலைக்கு பொருந்தும் ‘திமுக ஃபைல்ஸ்’ லாஜிக்..? உருட்டுக்காக உதை வாங்கும் திருச்சி சூர்யா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share