மன்மோகன் சிங் இறப்பில் அரசியல் ஆதாயம்... சீக்கியர்களிடம் சிண்டு முடியும் காங்கிரஸ்..? இறுமாப்புக்காட்டி இணங்கி வந்த பாஜக..!
கண்டு கொள்ளாத காங்கிரஸ் இப்போது மன்மோகன் சிங் இறுதிச்ச்டங்கு, நினைவிடத்தை அரசியலாக்கி வாக்குகளை அறுவடை செய்ய முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மறைந்த முன்னாள் பிரதமர்களான மொரார்ஜி தேசாய், வி.பி.சிங், நரசிம்ம ராவ் ஆகியோர் மறைந்தபோது தலைநகர் டெல்லியில் அவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்யவோ, நினைவிடம் அமைக்கவோ அப்போதைய மத்திய அரசு முன்வரவில்லை. அந்த மூவரும் இறந்தபோது இதே காங்கிரஸ் கட்சிதான்மத்தியில் ஆட்சியில் இருந்தது.
அவர்களையெல்லாம் கண்டு கொள்ளாத காங்கிரஸ் இப்போது மன்மோகன் சிங் இறுதிச்ச்டங்கு, நினைவிடத்தை அரசியலாக்கி வாக்குகளை அறுவடை செய்ய முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ‘‘இந்திய பிரதமர்கள் மூவரின் இறுதிச் சடங்குகளில் அநீதி..! காங்கிரஸ் கட்சியின் பாரபட்சம்... ‘காந்தி’குடும்பத்தின் உள்குத்து அரசியல்..!’’ நாம் ஏற்கெனவே விரிவான செய்தி ஒன்றை பதிவு செய்துள்ளோம்.
விரிவாக அறிந்து கொள்ள:- இந்திய பிரதமர்கள் மூவரின் இறுதிச் சடங்குகளில் அநீதி..! காங்கிரஸ் கட்சியின் பாரபட்சம்... ‘காந்தி’குடும்பத்தின் உள்குத்து அரசியல்..!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம், நினைவிட விவகாரம் அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. இந்த மோதலில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன. மன்மோகனின் இறுதிச் சடங்குகளுக்கு சிறப்பு நிலம் வழங்காதது சீக்கியர்களை அவமதிக்கும் செயல் என்கிறது காங்கிரஸ். ஆனால், சோகத்திலும் காங்கிரஸ் அரசியல் செய்வதாக பாஜக கூறுகிறது.
இதையும் படிங்க: இந்திய பிரதமர்கள் மூவரின் இறுதிச் சடங்குகளில் அநீதி..! காங்கிரஸ் கட்சியின் பாரபட்சம்... ‘காந்தி’குடும்பத்தின் உள்குத்து அரசியல்..!
தலைநகர் டெல்லியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில் மன்மோகன் மூலம் சீக்கியர்களை இழிவுபடுத்தும் விவகாரம் என காங்கிரஸ் கிளர்ச்சியை தூண்டியுள்ளது.
மன்மோகன் சிங் மறைவுக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நினைவிடம், தகனம் செய்ய நிலம் வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். ‘‘மன்மோகன் நாட்டின் பிரதமராக இருந்துள்ளார். ஆகையால், அவரது இறுதி சடங்குக்காக ராஜ்காட் அருகே நிலம் வழங்கப்பட வேண்டும்’’ என்று கார்கே கேட்டுக் கொண்டிருந்தார்.
மல்லிகார்ஜுன கார்கேயின், இந்த பரிந்துரையை மத்திய அரசு கவனத்தில் எடுத்துள்ளது. மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் கட்ட டெல்லியில் நிலம் தேடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜெய்ராம் ரமேஷ் ஒரு பதிவை வெளியிட்டார். ‘‘மன்மோகன் சிங் போன்ற உயரிய தலைவருக்கு கூட அரசால் நிலம் கிடைக்கவில்லை. இது சீக்கிய சமூகத்தின் முதல் பிரதமருக்கு இழைக்கப்பட்ட கடும் அவமதிப்பாகும்’’ என குற்றம்சாட்டி இருந்தார்.
அவருக்கு பதிலளித்துள்ள பாஜக ராஜ்யசபா எம்பி சுதன்ஷு திரிவேதி, ‘‘டாக்டர் சிங்கிற்கு காங்கிரஸ் ஒருபோதும் மரியாதை கொடுத்ததில்லை. இன்று அவர் இறந்த பிறகும் அரசியல் செய்து வருகிறார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இரு கட்சிகளுக்கும் இடையேயான இந்த அறிக்கைப் போரில் ஆம் ஆத்மி கட்சியும் குதித்தது. ‘‘10 ஆண்டுகள் நாட்டின் பிரதமராக இருந்தவருக்கு 1000 அடி நிலத்தை கூட அரசால் வழங்க முடியவில்லை. இது சீக்கிய சமூகத்தை அவமதிக்கும் செயலாகும்’’என டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
சீக்கிய சமூகத்தின் மீதான அரசியலுக்கு முக்கிய காரணம் டெல்லியில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல். தலைநகர் டெல்லியில் சீக்கியர்கள்தான் கேம் சேஞ்சர்கள் 9 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் சீக்கிய சமூகம் டெல்லியில் சுமார் 4 சதவீத மக்கள்தொகையைக் கொண்டுள்ளது.
சீக்கிய வாக்காளர்கள் அதிகம் உள்ள இடங்களில், ஹரி நகர், கல்காஜி, ரஜோரி கார்டன் ஆகியவை முக்கிய இடங்கள். மன்மோகன் சிங் காலத்தில் சீக்கிய சமூகத்தினர் காங்கிரசுக்கு வாக்களித்தனர். 2013 ல், சீக்கியர்களின் வாக்குகள் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளிடையே இடையே பிரிக்கப்பட்டது. 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக வாக்களித்தனர். இம்முறை பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என அனைத்து கட்சிகளும் சீக்கிய வாக்காளர்கள் மீது கண் வைத்துள்ளன.
சீக்கிய சமூகத்தின் கோட்டை பஞ்சாப். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அங்கு சீக்கிய சமூகத்தின் மக்கள் தொகை சுமார் 58 சதவீதம். 117 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பஞ்சாபில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் பெரும்பாலான எம்எல்ஏக்கள். இங்குள்ள பெரும்பாலான முதல்வர்களும் இந்த சமூகத்தை சேர்ந்தவர்களாகவே இருந்துள்ளனர்.
பஞ்சாப் மட்டுமல்ல... இந்தியா முழுவதும் சீக்கியர்கள் வசிக்கின்றனர். பஞ்சாபில் கடந்த 2022-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 90 இடங்களில் வெற்றி பெற்றது.
பஞ்சாபில் உள்ள சீக்கிய சமூகத்தின் கிட்டத்தட்ட பாதி வாக்குகளை ஆம் ஆத்மி பெற்றுள்ளது. மீதமுள்ள வாக்குகள் காங்கிரஸ்- அகாலி கட்சிகளுக்கு இடையே பிரிக்கப்பட்டது.
ஹரியானா -ராஜஸ்தானில் சீக்கிய வாக்காளர்களும் ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள். ஹரியானாவில், பஞ்சாப் எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீக்கிய வாக்காளர்கள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றனர். மாநிலத்தில் சீக்கிய வாக்காளர்கள் 15 முதல் 20 லட்சம் வரை உள்ளனர். இது சுமார் 12 சட்டமன்ற தொகுதிகளை நேரடியாக பாதிக்கிறது. ஹரியானாவின் 4 மக்களவைத் தொகுதிகளிலும் சீக்கிய சமூக வாக்காளர்கள் செல்வாக்கு செலுத்துகின்றனர்.
ஹரியானாவில், குறிப்பாக அம்பாலா, யமுனாநகர் போன்ற பகுதிகளில் சீக்கியர்கள் மிகவும் செல்வாக்குடன் உள்ளனர். ராஜஸ்தானிலும் சீக்கிய சமூகம் ஆதிக்கம் செலுத்துகிறது. ஸ்ரீகங்காநகர் பகுதியில் சீக்கிய சமுதாய வாக்காளர்கள் வெற்றி தோல்வியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ராஜஸ்தானில் சுமார் 6 லட்சம் சீக்கிய வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் 7-8 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர்.
மக்களவையில் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த 13 எம்.பி.க்கள் உள்ளனர். சீக்கிய எம்.பி.க்கள் அதிகபட்சமாக பஞ்சாப்பில் இருந்து தேர்தெடுக்கப்பட்டவர்களே. ஆகையால்தான் மன்மோகன் சிங் உயிருடன் இருந்த போது கொண்டாடப்படாமல் அவரது சீக்கிய முகத்துக்காக அனைத்து கட்சிகளும் அவரது இறப்பிற்கு பிறகு அரசியலாக்கின் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன.
இதையும் படிங்க: ‘அழிவும் நானே... ஆக்கமும் நானே...’மன்மோகன் சிங்கால் காங்கிரஸ் பெற்றதும்... இழந்ததும்... மீளாத சோனியா குடும்பம்..!