×
 

தேதி குறித்த மோடி... கெஞ்சும் அண்ணாமலை: போட்டுடைத்த முக்கியப்புள்ளி..!

திய தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம் பெயர்கள் முன் வரிசையில் இருப்பதாக கூறப்படுகிறது. 

தமிழக பாஜக தலைவர் பதவிக்கு புதிய தலைவரை நியமிக்கத் திட்டமிட்டு டெல்லி பாஜக மேலிடம் அதற்கான தேதி குறித்து இருக்கிறது. புதிய தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம் பெயர்கள் முன் வரிசையில் இருப்பதாக கூறப்படுகிறது. 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தயாராகி வரும் நிலையில், தமிழக பாஜகவும் தனது களப்பணியை தீவிரப்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவுக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் வகையில் வலுவான கூட்டணியை அமைக்க திட்டமிட்டு இருக்கிறது பாஜக தேசிய தலைமை. 

இதையும் படிங்க: ரொம்ப சந்தோஷம்… மோடி அரசை புகழ்ந்து தள்ளிய திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்..!

இந்நிலையில், அண்மையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவை இணைக்கும் வகையில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை டெல்லிக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இதனை அடுத்து தனியார் சேனலுக்கு பேட்டி அளித்த அமித் ஷா தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக உறுதிப்படுத்தினார்.

அதே நேரத்தில் இந்த பேச்சுவார்த்தையின்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகிக்கும் என பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அதனை அடுத்தே பாஜக தேசிய தலைமை, தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலையை மாற்ற முடிவு செய்து புதிய தலைவரை தேர்வு செய்ய தீவிரமாக களம் இறங்கியுள்ளது.

அண்ணாமலையை பொறுத்தவரையில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க கூடாது என்கிற தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், மறைந்த அதிமுக தலைவர்கள், மட்டுமின்றி தற்போது பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவரை கடுமையாக விமர்சித்தார் அண்ணாமலை. ஆகையால் தற்போது அதிமுகவுடன் கூட்டணி சேர்வதால் கடுகடுப்பில் இருக்கிறார் அண்ணாமலை.

இதனால் அதிமுகவுடன் இணக்கமாக உள்ள பாஜக தலைவர்களான நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோரியின் பெயர்களை டெல்லி தலைமை பரிசீலனை செய்து வருகிறது. இதனிடைய வருகிற 6-ம் தேதி தமிழகத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக தலைவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.  9ஆம் தேதி புதிய தலைவர் யார் என்று அறிவிப்பு வெளியாகும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலையை மாற்றும் இந்த முடிவுக்கு ஆதரவைவிட, எதிர்ப்பு அதிகம் இருப்பதால் பாஜகவின் அடுத்த கட்ட முடிவு கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். திமுகவை பொறுத்த அளவில் தமிழகத்தில் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என நினைப்பதாகவும், அண்ணாமலைக்கு திமுக பயப்படுகிறது.

ஆனாலும், மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பாஜக மாநில தலைவரை மாற்றுவது தமிழகத்தில் மட்டுமல்ல. அனைத்து மாநிலத்திற்கும் பொருந்தும். அந்த வகையில்தான் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட இருப்பதாக தேர்வு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாற்றப்படும் அண்ணாமலைக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: டிக் அடித்த மோடி, அமித் ஷா... நிர்மலா சீதாராமனுக்கு காத்திருக்கும் மெகா ஜாக்பாட்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share