×
 

நாடார்கள் ஓட்டு வேணுமா? நாவை அடக்கிப் பேசு... ராஜேந்திர பாலாஜிக்கு பகிரங்க எச்சரிக்கை...!

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து விருதுநகரில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜேந்திர பாலாஜியை கண்டித்து விருதுநகரில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விருதுநகரில் முன்னாள் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசி இருந்த நிலையில் , அவரைக் கண்டித்தும் மாஃபா பாண்டியராஜனுக்கு ஆதரவு தெரிவித்தும் விருதுநகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகரில் கடந்த 5 ம் தேதி அஇஅதிமுக சார்பில்  நடைபெற்ற  முன்னாள் அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா  பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி,  கட்சி நிர்வாகி ஒருவரை மேடையிலேயே  தாக்கினார்.   அப்போது உரையாற்றிய மாஃபா பாண்டியராஜன், ராஜேந்திரபாலாஜி ஒரு குறுநில மன்னர் போல செயல்படுகிறார் எனத்தெரிவித்தார். 

இதையும் படிங்க: அதிரும் அதிமுக... அடுத்தடுத்து நடந்த சண்டையால் இபிஎஸ் அப்செட்!!

இதனைத் தொடர்ந்து, சிவகாசியில் மார்ச் 7 ம் தேதி நடந்த அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் “நீ (மாஃபா பாண்டியராஜன் பெயரைக் குறிப்பிடாமல்) செய்வதெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க நான் கிறுக்கனோ பைத்தியக்காரனோ இல்லை. தொலைத்துவிடுவேன். அதிமுகவைக் காட்டிக் கொடுத்தவர் நீ. எனக்கு வரலாறு இருக்கிறது. உனக்கு என்ன வரலாறு இருக்கிறது?. அதிமுகவில் நான் ஒரு குறுநில மன்னர்தான். எனக்குப் பின்னால் உள்ள தொண்டர்கள் வாள் ஏந்திய படைவீரர்கள். என்னைப் பற்றிப் பேச வேண்டும் என்றால் விருதுநகரில் வைத்துப் பேச வேண்டும். சென்னையில் சென்று ஏன் பேசுகிறார்? வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் அதிமுகவில்தான் இருப்பேன். அதிமுகவிற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து எடப்பாடிக்குக் குழி பறிக்கும் வேலை நடந்து வருகிறது.விருதுநகர் அதிமுகவில் என்னை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. அதிமுகவை வாழ வைக்க எந்த நிலைக்கும் நான் செல்வேன். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக யார் வந்தாலும் அரிவாள், துப்பாக்கி ஏந்தி நிற்பேன். உன்னால் முடியுமா? என்றெல்லாம் பேசியிருந்தார். 

முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு மிரட்டல் விடும் தோரணையில் கே.டி .ராஜந்திர பாலாஜி  பேசியிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில், விருதுநகர் தன்னுடைய கோட்டை என்பது போல் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியிருந்த நிலையில், ‌ அவரைக் கண்டித்தும் மாஃபா பாண்டியராஜனுக்கு ஆதரவு தெரிவித்தும் விருதுநகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

அந்த போஸ்டரில், எங்கள் சமூக, படித்த பண்பாளர் அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் மஃபா.K.பாண்டியராஜன் 
அவர்களை அவ மரியாதையாக பேசி, மிரட்டிய ராஜேந்திரபாலாஜியே! நாடார்கள் வாக்கு உனக்கும் உன்கட்சிக்கும் வேண்டாமா?. நாவை அடக்கி பேசு!!. காமராஜ் நாடார் சமூக அறக்கட்டளை விருதுநகர் மாவட்டம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கிடையே இருந்த பனிப்போர் முற்றி தற்போது மோதல் போக்காக மாறியுள்ளது.

இதையும் படிங்க: என்னா அடி... பொன்னாடை போர்த்த வந்த அதிமுக நிர்வாகியை போட்டுப் பொளந்த ராஜேந்திர பாலாஜி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share