×
 

புதிய சி.பி.ஐ ஊழல் வழக்கில் சிக்கிய கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் மீது புதிய சி.பி.ஐ ஊழல் வழக்கு..!

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் மீது சிபிஐ புதிய ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது. 

காங்கிரஸ் எம்.பி.க்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில், அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் டியாஜியோ ஸ்காட்லாந்து மற்றும் செகோயா கேபிடல்ஸ் ஆகியவற்றிலிருந்து சந்தேகத்திற்கிடமான பணம் வந்ததாகக் கூறப்பட்டுள்ளது. 

வரி இல்லாத ஜானி வாக்கர் விஸ்கியை இறக்குமதி செய்து வந்த டியாஜியோ, 2005 ஏப்ரலில் இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்பனை செய்ய தடை விதித்தபோது பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டது விசாரணையில் தெரியவந்தது. 

இதையும் படிங்க: வசமாக சிக்கிய ராஜேந்திர பாலாஜி... ஒரே போடாய் போட்ட உயர்நீதிமன்றம்! 

தடையை நீக்குவதற்காக கார்த்தி சிதம்பரத்தை டியாஜியோ அணுகியதாகவும், ஆலோசனை ஒப்பந்தம் என்ற போர்வையில் அவருக்கு 15,000 டாலர்களை வழங்கியதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் முன்னதாக ஏஜென்சிகளுடன் சிக்கலில் இருந்தார். 

இதையும் படிங்க: மத்திய அரசு அதிகாரிகள் மீது ஊழல் வழக்குப்பதிவு: சிபிஐ-க்கு மாநில அரசுகளின் அனுமதி தேவையில்லை; உச்சநீதிமன்றம் அதிரடி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share