அதிமுகவா? தவெகவா? - தம்பிகளுக்கு சீமான் போட்ட அதிரடி உத்தரவு...!
யார் வேணாலும் என்ன கூட்டணி கணக்கு வேணாலும் போடுங்க வழக்கம் போல என் வழி தனி வழின்னு தம்பிகளுக்கு மெசேஜ் சொல்லி இருக்காராம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
யார் வேணாலும் என்ன கூட்டணி கணக்கு வேணாலும் போடுங்க வழக்கம் போல என் வழி தனி வழின்னு தம்பிகளுக்கு மெசேஜ் சொல்லி இருக்காராம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. யார் யாருடன் கூட்டணி வைக்க போகிறார்கள் என திரைமறைவில் வேக, வேகமாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. வர உள்ள 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ரேஸில் சீமானின் நாம் தமிழர் கட்சியையும் இழுக்க சில முக்கிய கட்சிகள் முயன்று வருகின்றனவாம். இருந்தாலும் யார் யாருடன் கூட்டணி வைத்தாலும் சரி, என் வழி தனி வழி என நாதக தம்பிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம் சீமான்.
இதையும் படிங்க: ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்.. பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து..!
தமிழக வெற்றிக் கழகம், அதிமுக என இரண்டு கட்சிகள் சீமானை தங்கள் பக்கம் வளைக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் வழக்கம் போல் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிட உள்ளதாக சீமான் தனது கட்சியினரிடம் வெளிப்படையாக சொல்லிவிட்டாராம். அத்துடன் எப்போதும் போல 117 பெண் வேட்பாளர்கள், 117 ஆண் வேட்பாளர்கள் என பட்டியலை தயார் செய்யும் படி தம்பிகளுக்கு உத்தரவிட்டாராம். அதன்படி, 100 தொகுதிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணியும் முடிவடைந்துள்ளதாம்.
இதையெல்லாம் கணக்குப் போட்டுத் தான் சமீபத்தில் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது கூட 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடமாட்டோம். தனித்தே போட்டியிடுவோம். கூட்டத்துடன் நிற்க துணிவோ, வீரமோ தேவையில்லை. தனித்து நிற்கத்தான் துணிவும் வீரமும் அவசியம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு திமுகவை வீழ்த்துவேன் என்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிலைப்பாட்டை வரவேற்கிறேன். எதிரியைத் தீர்மானித்து விட்டுத்தான் நாங்கள் களத்தில் இறங்கி உள்ளோம். எங்களுக்கு எந்த குழப்பமோ, தடுமாற்றமோ கிடையாது. இன்னும் சில மாதங்களில் நாங்கள் எங்கே நிற்கிறோம், மற்றவர்கள் யார் யாருடன் இணையப் போகிறார்கள் என்பதை அனைவரும் பார்க்கத்தான் போகிறார்கள் என சீமான் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ராமஜெயம் கொ**யிலேயே துப்பு துலக்க முடியல.. இதுல பாமர மக்களுக்கு பாதுகாப்பாம்.. சிதறவிடும் சீமான்