×
 

அதிகரிக்கும் மோசடி கும்பல்.. பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய போலீஸ்..!

கோவையில் பகுதி நேர வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக மோசடி செய்து வரும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் புகார் அளித்த வருகின்றனர்.

சமீப காலமாக பகுதி நேர வேலையை வாங்கி தருவதாக குறுஞ்செய்தி அனுப்பி அதன் மூலம் பணம் பறிக்கும் கும்பல்  அதிகரித்து வருகின்றனர். google ரிவ்யூ பதிவிட்டு, 5 ஸ்டார் ரேட்டிங் அழைத்தால் கமிஷன் அளிக்கப்படும் என சிலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பல நடுத்தர மற்றும் இரண்டாம் வருமானத்திற்காக வலியை தேடும் பல இளைஞர்கள் இந்த வலையில் சிக்கித் அவர்களின் பணத்தை மொத்தமாக இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கோவை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த ஆயிஷா சர்மிள் ஜஹான் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி இவரது whatsapp எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் முன்னணி ஓட்டல்கள் குறித்து google ரிவ்யூ பதிவிட்டால் நல்ல கமிஷன் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பிய ஆயிஷா, அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பது போல் பின்பற்றி சில ஓட்டல் நிறுவனங்களுக்கு ரிவ்யூ கொடுத்துள்ளார். தொடர்ந்து அதற்கான கமிஷன் தொகையை ஆயிஷாவிற்கு வழங்கியுள்ளனர். இவ்வாறு முன்பணம் கொடுத்து ஏமாற்றி பின்னர் பெரிய தொகையாக சுருட்டி கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: புதுச்சேரி சிறுமிக்கு பாலியல் தொல்லை... கருத்து தெரிவித்த பிரபல 'யூ-டியூபர்' கைது..!

இதனை அடுத்து பேக்கேஜ் என்ற பெயரில் முன்பணம் செலுத்தி ரிவ்யூ செய்யும் முறை குறித்து மோசடி நபர்கள் ஆயிஷாவிடம் தெரிவித்துள்ளனர். அதன்படி செய்தால் மேலும் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய ஆஷா முதற்கட்டமாக ஒரு தொகையை செலுத்தி ரிவ்யூ செய்துள்ளார் அதற்காக அவருக்கு கமிஷனும் அவரது கணக்கில் வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆயிஷா மோசடி நபர்கள் அளித்த வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை அனுப்பி ரிவ்யூ செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரால் கமிஷன் பணத்தை வங்கி கணக்கிற்கு மாற்ற முடியாமல் இருந்துள்ளது. 

வங்கி கணக்கிற்கு மாற்ற மேலும் பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதில் சந்தேகம் அடைந்த ஆயிஷா இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆயிஷா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது போன்ற மோசடி கும்பலின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்குமாறு போலீசார்தாரப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திமுகவே... ஆர்டிகல் 356 தான்..! ஹிந்தி படிக்கிறத தடுத்தா அவ்வளவுதான்..! மிரட்டும் சு.சுவாமி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share