சுட்டுப்பொசுக்கு... பாகிஸ்தானுக்குள் புகுந்த இந்தியாவின் ரா... நடுங்கும் தீவிரவாதிகள்..!
இந்தியாவின் உளவு அமைப்பான ராவின் ரகசிய திட்டங்கள் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் பயங்கரவாதிகள் குறி வைத்து அழிக்கப்பட்டு வருகிறார்கள். அதனால் பாகிஸ்தான் தூக்கமில்லாத இரவுகளை கழித்து வருகிறது. அந்நாட்டிற்குள் நடக்கும் பயங்கரவாதிகளின் கொலைகளுக்குப் பின்னணியில் இந்தியாவின் உளவு அமைப்புகள் இருப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியாவின் உளவு அமைப்பான ராவின் ரகசிய திட்டங்கள் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் மும்தாஜ் சஹ்ரா பலோச், இந்தியாவின் கொலைகள், கடத்தல்கள் திட்டம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திற்குள் பரவியுள்ளதாக குற்றம் சாட்டினார்.
இந்தியாவின் உளவு அமைப்பான ரா ஒரு ரகசிய நடவடிக்கையை நடத்தியதாகவும், அதன்பிறகு பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் ஒருவரையொருவர் கொன்று குவித்ததாகவும் அமெரிக்க செய்தித்தாளான வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு நாட்டிற்குள் நுழைந்து மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு இருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக கூட்டுச் சதி..! வங்கதேசத்துக்கு பாகிஸ்தான் அனுப்பிய 250 கிலோ ஆர்டிஎக்ஸ்...100 ஏகே- 47
ஏப்ரல் 2023 ல் லாகூர் நகருக்குள் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சர்ஃபராஸ் தம்பாவின் கொலை மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. 2011ஆம் ஆண்டு இந்திய உளவுத்துறை அதிகாரி கொலையில் சர்பராஸ் தொடர்புடையவர். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
2021ல் அதிகரிக்கத் தொடங்கிய பல கொலைகளின் ஒரு பகுதியாக தம்பாவின் கொலை நடந்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர். துபாயில் இதற்கான வலையமைப்பை ரா தயாரித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. துபாயில் இருந்து ரா ஏஜெண்டுகள் பாகிஸ்தானில் உள்ள உள்ளூர் குற்றவாளிகள், ஆப்கானிஸ்தான் குடிமக்களைத் தொடர்புகொண்டு இலக்குகள் நிர்ணயிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
வாஷிங்டன் போஸ்டின் செய்தியில், ‘‘பாகிஸ்தானின் உள்ளூர் நெட்வொர்க்குகள் மூலம் சேகரிக்கப்பட்ட உளவுகள் அடிப்படையில் இந்திய ஏஜெண்டுகள் அறிவுறுத்தல்களை வழங்குகிறார்கள். மேற்கத்திய நாடுகளில் இந்தியாவின் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் உத்திகள் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்டவை என்றும் கூறுகிறது. ஆனால், அப்படி எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்று இந்தியா எப்போதும் மறுத்து வருகிறது.
பாகிஸ்தானில் வசிக்கும் காஷ்மீர் பயங்கரவாதி சையது சலாவுதீனை 2012-ம் ஆண்டு கொல்ல இந்தியா முயன்று தோல்வியடைந்ததாக பாகிஸ்தானின் டெய்லி ட்ரிப்யூன் நாளிதழில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் உள்ள பேக்கரிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்தியா ஈடுபட்டிருக்கலாம் என்று பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த துப்பாக்கிச் சூட்டில் காபூலில் உள்ள இந்திய தூதரகம் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் சந்தேக நபர் நசீருதீன் ஹக்கானி கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானுக்குள் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளைக் கொன்றதாக இந்தியா மீது குற்றம் சாட்டப்படுவது இது முதல் முறை அல்ல. பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான திட்டத்தில் ஒரு பகுதியாக, பாகிஸ்தானுக்குள் குறைந்தது 20 பேரைக் கொல்ல இந்தியா உத்தரவிட்டதாக கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையில் பேசும்போது, ‘‘பாகிஸ்தான், இந்தியாவிற்குள் புகுந்து கொல்லுகிறது’’ எனக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ‘அண்ணாமலையை நீக்கினால் தமிழக பாஜகவுக்கு பரலோகம்தான்..!’அதிர்ச்சி கிளப்பும் ஆதரவாளர்கள்..!