×
 

ரஷ்யா-உக்ரைன் போரில் நடுநிலை இல்லை.. சமாதானம் மட்டுமே..! மோடியின் பதிலால் ஆடிப்போன ட்ரம்ப்..!

ரஷ்யா-உக்ரைன் இடையிலா போர் இந்தியாவின் நிலைப்பாடு என்பது இருதரப்பையும் சமாதானம் செய்யும் வகையில்தான் செயல்படுமேத் தவிர நடுநிலை வகிக்காது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி பிரான்ஸ், அமெரிக்கா நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ளார். பிரான்ஸ் பயணத்தை முடித்துவிட்டு நேற்று அமெரிக்காவுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவின் புதிய உளவுத்துறை தலைவர் துள்சி கப்பார்டை சந்தித்து நேற்று பிரதமர் மோடி பேசினார். புதிதாக பதவியேற்றுள்ள துள்சி கப்பார்டுக்கு வாழ்த்துக்களையும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

அதன்பின், வெள்ளை மாளிகையில் அமெரி்க்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை சந்தித்துப் பிரதமர் மோடி பேசினார். இரு தலைவர்களும் ஊடகங்களுக்கு கூட்டாகப் பேட்டியளித்தனர். அப்போது ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து நிருபர்கள் கேட்டபோது அதற்கு பிரதமர் மோடி பதில் அளித்ததாவது, நான் எப்போதுமே ரஷ்ய அதிபர், உக்ரைன் பிரதமருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். இந்தியா நடுநிலையுடன் இருக்கிறது என்று பலரும் தவறாக நினைக்கிறார்கள்.

ஆனால், நான் ஒன்றை தெளிவுபடுத்துகிறேன். ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரில் இந்தியாவின் நிலைப்பாடு என்பது நடுநிலை வகிப்பது அல்ல. அதேசமயம், அமைதியின் பக்கம் நாங்கள் நிற்கிறோம். ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து, இது போரின் சகாப்தம் அல்ல என்று  இரு தலைவர்களிடமும் இந்தியாவின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ரஷ்யா-உக்ரைன் இடையிலான பிரச்சினைக்கு தீர்வு என்பது போர்க்களத்தில் காண முடியாது என்பதை இந்தியா சார்பில் பலமுறை வலியுறுத்தியுள்ளோம். 

இதையும் படிங்க: குழந்தை குட்டிகளோடு மோடியை பார்த்த எலான் மஸ்க்..! விரைவில் இந்தியாவில் டெஸ்லா

என்னுடன் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இருந்தபோது, அனைத்து ஊடகத்தார் முன்னிலையில் இது போருக்கான காலம் அல்ல என்று தெளிவாக நான் தெரிவித்துள்ளேன். இன்றும் கூட, போருக்கான தீர்வுகளை போர்க்களத்தில் காண முடியாது என்பது எனது உறுதியான நம்பிக்கை. ரஷ்யா-உக்ரைன் இடையிலான பிரச்சினைக்கு தீர்வு என்பது இருநாடுகளும் இணைந்து பேசுவதன் மூலம்தான் ஏற்படும்.

இந்த முயற்சிக்கு உதவிய அதிபர் ட்ரம்ப்பை நான் ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன். அவரின் முயற்சிகள் விரைவில் பலிதாமாகும். ரஷ்யா-உக்ரைன் பிரச்சினையில் அமைதியைக் கொண்டுவருவதற்கு அனைத்து வகையிலும் நாங்கள் ஆதரவு தருவோம், அதிபர் ட்ரம்ப் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் ஆதரிப்போம்” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதையும் படிங்க: சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை அழைத்துக் கொள்கிறோம்: அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் பிரதமர் மோடி உறுதி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share