"கலி முத்திருச்சு.." அம்மாவுக்கு மாதம் ரூ.5 ஆயிரம்.. ரூ.50 ஆயிரம் அபராதம்; மகனுக்கு, ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!
அரியானாவில் 77 வயது விதவை தாயாருக்கு மாதம்தோறும் பராமரிப்பு தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று அவரது மகனுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரியானா மாநிலம் சங்கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 77 வயது விதவைத் தாயார் ஒருவர் ஜீவனாம்சம் கேட்டு மாவட்ட குடும்ப நீதிமன்றத்தில் மகனுக்கு எதிராக வழக்கு தொடுக்கிறார். மனுவை விசாரித்த நீதிமன்றம் விதவை தாயாருக்கு மாதம்தோறும் பராமரிப்பு தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறார்.
அதைத்தொடர்ந்து தனது தாயாருக்கு ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாய் வழங்கி விட்டதாகவும் தற்போது தாயார் தனது மகள் வீட்டில் இருப்பதால் தன்னால் மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்க முடியாது என்று அவரது மகன் கோரிக்கை விடுத்து குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து பஞ்சாப் அரியானா மாநில உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்கிறார்.
இதையும் படிங்க: துபாயில் தந்தை- மகன் நீரில் மூழ்கி பலி.. நெல்லையில் தாய் தற்கொலை முயற்சி... பதற வைக்கும் சம்பவம்!
இந்த சீராய்வு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, தனது தீர்ப்பில் சொன்ன வார்த்தைகள் தான் இந்த செய்தியின் தலைப்பில் நீங்கள் காண்பது.
இந்த மனு நீதிமன்றத்தின் மனச்சாட்சியை உலுக்கிய உன்னதமான ஒரு கலியுக உதாரணம் என்பதை கவனித்த அந்த நீதிபதி, தனது தாய்க்கு பராமரிப்பு தொகையாக மாதம் 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்ற செசன்ஸ் கோர்ட் தீர்ப்பை உறுதி செய்து அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அத்துடன் அபராதமாக இன்றிலிருந்து மூன்று மாதத்திற்குள் 50,000 ரூபாய் தாயாரின் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஜஸ்குர்பிரீத் சிங் புரி, "தனது தந்தையின் சொத்தை வாரிசாக கொண்ட மகனின் 77 வயதான விதவை தாய்க்கு எந்த வருமான ஆதாரமும் இல்லை (திருமணமாகி தனது மகளுடன் வசித்து வருகிறார்.) என்பது தெரிந்திருந்தும், ஐந்தாயிரம் ரூபாய் ஜீவனாம்சம் நிர்ணயித்ததை எதிர்த்து தனது சொந்த தாய்க்கு எதிராக தற்போதைய மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய தேர்ந்தெடுத்திருப்பது இந்த நீதிமன்றத்தின் மனச்சாட்சியை உண்மையிலேயே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிட்டது" என்று கூறியிருக்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், "இது. கலியுகத்தின் ஒரு சிறந்த உதாரணம். இது இந்த நீதிமன்றத்தில் மனச் சாட்சியை உலுக்கிவிட்டது. குடும்ப நீதிமன்றத்தின் கற்றறிந்த முதன்மை நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்த சட்ட விரோதமும் இல்லை. மாறாக ஐந்தாயிரம் தொகையை கூட கொடுக்க முடியாது என்பது முற்றிலும்பொருத்தம் மற்றது" என்றும் அவர் அறிவுரை வழங்கியிருக்கிறார்.
அந்த தாய் ஒரு விதவை என்றும் திருமணமான தனது மகளுடன் வசித்து வருவதாகவும் மனுதாரரான அவருடைய மகன் 1993 ஆண்டு கடந்த கால நிகழ்காலம் மற்றும் எதிர்கால பராமரிப்புக்காக அவர் தாய்க்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 125 வது பிரிவின் கீழ் ஜீவனாம்சமாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்ற சங்க்ரூர் முதன்மை நீதிபதி (குடும்ப நீதிமன்றம்) பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தனது 77 வயதில் தாய்க்கு எதிராக மகன் தாக்கல் செய்த சீராக மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்தது.
மனுக்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் குடும்ப நீதிமன்றம் பிரதிவாதியான விதவை தாய்க்கு வருமான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் அவர் தன்னுடைய மகளுடன் வசித்து வருகிறார் என்ற முடிவுக்கும் வந்துள்ளது. மனுதாரரும் மருமகளும் அவரை பராமரிக்க புறக்கணித்ததும் கவனிக்கப்பட்டது.
விதவைத் தாயின் கணவர் 1992 ஆண்டு இறந்துவிட்டதாகவும் மனுதாரர் மகன் அவருடைய சொத்தை வாரிசாகப் பெற்றதாகவும் இதன் அடிப்படையில் எதிர்கால பராமரிப்புக்காக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு அவர் வீட்டை விட்டு வெளியேறி மகளுடன் வாழ தொடங்கினார்.
இருதரப்பு விவாதங்களையும் கேட்ட பிறகு நீதிமன்றம் "தற்போது 77 வயதாகும் தனது தாய்க்கு எதிராக ஒரு மகன் இந்த சீராய்வு மனுவை தாக்கல் செய்திருப்பது துரதிஷ்டவசமானது" என்று கூறியது.
மகனின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் குடும்ப நீதிமன்றம் நிர்ணயத்தை மாதம் 5 ஆயிரம் ரூபாய் பராமரிப்புத் தொகையை வழங்க வேண்டும் என்றும் அத்துடன் 50 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதித்த நீதிபதி இன்றிலிருந்து மூன்று மாதங்களுக்குள் குடும்ப நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி முன்பு 50 ஆயிரம் ரூபாய்க்கு தாயின் பெயரில் ஒரு டிமாண்ட் டிராப்ட் டெபாசிட் செய்வதன் மூலம் இந்த அபராத தொகையும் தாய்க்கு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்
இதையும் படிங்க: ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆடிய மனைவி.. நடத்தையில் சந்தேகப்பட்டு வெட்டிக்கொன்ற கணவன்.. விருதுநகரில் பரபரப்பு..!