சைஃப் அலி கானின் ஆடம்பரமான சத்குரு ஷரன் அபார்ட்மெண்ட்… 12 மாடி கட்டிடத்தில் இத்தனை பாதுகாப்பு அம்சங்களா..?
ஒவ்வொரு பிளாட்டிலும் ஊழியர்களுக்கு தனித்தனி குடியிருப்புகள் உள்ளன. பிளாட்டுக்கு வெளியே ஒரு காத்திருப்பு பகுதியும் உள்ளது. கட்டிடத்தில் லிஃப்ட் வசதி உள்ளது.
ஜனவரி 16,இன்று அதிகாலை 3 மணியளவில், பாந்த்ரா மேற்கில் உள்ள பாலிவுட் நவாப் சைஃப் அலி கான், அவரது மனைவி நடிகை கரீனா கபூரின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் கத்தியால் குத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சைஃப் அலி கானின் வீட்டிற்குள் அடையாளம் தெரியாத ஒருவர் நுழைந்து அவரை கத்தியால் தாக்கினார். தற்போது, அவர் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இதில் பெரும்ம் சந்தேகம் என்னவென்றால், பாந்த்ரா போன்ற ஒரு பகுதியில், ஒரு நுழைவாயிலில் பலமான செக்யூரிட்டி கண்காணிப்பும், சிசிடிவி கேமராக்களும் இருந்தபோதும், சைஃப் அலிகான் போன்ற உச்ச பாதுகாப்பில் இருக்கும் ஒரு நடிகரின் வீட்டிற்கு இரவில் ஒரு அடையாளம் தெரியாத நபர் எப்படி வந்தார் என்பதுதான்.
4 ஆண்டுகளுக்கு முன்பு, சைஃப் அலி கான், அவரது மனைவி கரீனா கபூர் கான், அவரது மகன் தைமூர் ஆகியோருடன், அவர்களின் பழைய கட்டடமான ஃபார்ச்சூன் ஹைட்ஸிலிருந்து எதிர் கட்டிடமான சத்குரு ஷரணுக்கு குடிபெயர்ந்தனர். சைஃப், கரீனாவுக்கு அவர்களின் பழைய பிளாட் மிகவும் பிடித்திருந்தது. அதனால் அவர்கள் அதே பகுதியில் ஒரு புதிய பிளாட் வாங்கினார்கள். இந்த நேரத்தில், கரீனா கர்ப்பமாக இருந்ததால், அவரும் சைஃப்பும் ஒரு பெரிய இடத்திற்கு மாற முடிவு செய்தனர்.
இந்த கட்டடம் மும்பையில் உள்ள விஐபிகள் வசிக்கக்கூடிய ஹைடெக் ஏரியாவான பந்த்ரா பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதி மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.கட்டடத்தில் எல்லா இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நுழைவாயிலில் செக்யூரிட்டிகளுக்கு தங்கும் அறையுடன் பெரும் செக்யூரிட்டி படையும் பாதுகாப்பு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அதானியை ஆட்டிப்பார்த்த ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்! அதானி பங்குகள் மதிப்பு 9% உயர்வு..
விருந்தினர்கள் கட்டடத்திற்குள் நுழைவதற்கு முன்பு பாதுகாப்புக் காவலரிடம் பதிவு செய்யும் செயல்முறையை முடிக்க வேண்டும், அப்போது அவர்களது முகம் கேமராவில் பதிவாகும்.பின்னர் நீங்கள் செல்ல விரும்பும் அடுக்குமாடி குடியிருப்பை இண்டர்காம் மூலம் அழைத்து உறுதிப்படுத்தப்படும்.முன்பக்கத்திலிருந்து உறுதிப்படுத்தல் பெற்ற பின்னரே ஒருவர் இந்தக் கட்டிடத்திற்குள் நுழைய முடியும். அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தனி அடையாள அட்டை தயாரிக்கப்படுகிறது.இதனால் அனைவரும் அதைக் காட்டி கட்டிடத்திற்குள் நுழைய முடியும். இந்தக் கட்டிடத்தில் 24 மணி நேரமும் பாதுகாப்புக் காவலர்கள் இருப்பார்கள். மின்சார அவசரநிலைகளுக்காக கட்டிடத்தில் ஜெனரேட்டர்களும் நிறுவப்பட்டுள்ளன.
மும்பை காவல்துறையினர் இதுகுறித்து கூறுகையில், ''சைஃப் அலி கானின் வீட்டின் அனைத்து பாதுகாப்பு ஊழியர்கள்,வீட்டுப் பணிப்பெண்கள் சந்தேகத்தின் கீழ் உள்ளனர். ஏனென்றால் இவ்வளவு பாதுகாப்பு இருந்தபோதிலும், தாக்குதல் நடத்தியவர் வீட்டிற்குள் எப்படி நுழைந்தார்? மும்பை குற்றப்பிரிவு குழுக்களும் விசாரணையைத் தொடங்கியுள்ளன. போலீசார் சைஃப் அலி கானின் வீட்டின் அனைத்து சிசிடிவி காட்சிகளின் டி.வி.ஆரையும் விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். சைஃப் அலி கானின் வீட்டைச் சுற்றியுள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும், சுற்றியுள்ள சாலைகளின் காட்சிகளையும் குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது.
நட்புரீதியான நுழைவு கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இருப்பினும், இந்த வழக்கில் கொள்ளையர் கும்பல் ஈடுபடவில்லை என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. சிகிச்சைக்குப் பிறகு சைஃப் அலி கானின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும். தற்போது அவர் படுகாயமடைந்துள்ளதால், காவல்துறையினர் அவரது வாக்குமூலத்தை எடுக்க முடியவில்லை.
சைஃப் அலி கானும்,கரீனாவும் இந்த 12 மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் வசிக்கிறார்கள். கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் ஒரு பிளாட் உள்ளது. ஒவ்வொரு பிளாட்டிலும் ஊழியர்களுக்கு தனித்தனி குடியிருப்புகள் உள்ளன. பிளாட்டுக்கு வெளியே ஒரு காத்திருப்பு பகுதியும் உள்ளது. கட்டிடத்தில் லிஃப்ட் வசதி உள்ளது.
சைஃப் அலி கான் இங்கு 3 படுக்கையறைகள் கொண்ட குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த பிளாட்டின் பரப்பளவு 1600 சதுர அடிக்கு மேல். இந்த பிளாட்டில் ஒரு திறந்த பால்கனி இணைக்கப்பட்டுள்ளது. பார்க்கிங் குடியிருப்பாளர்களின் பைக்குகள், கார்கள், காவலர்கள், சிசிடிவி கண்காணிப்புக்காக கட்டிடத்திற்குள் ஒரு விசாலமான இடம் உருவாக்கப்பட்டுள்ளது.
சத்குரு ஷரன் குடியிருப்பு வளாகத்துக்கு வெளியே சைஃப் அலி கானையும்,அவரது குடும்பத்தினரையும் அவரது நண்பர்கள், ரசிகர்கள் சந்திப்பதுண்டு ஆனால், ஆனால் பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி, அவர்கள் கட்டிட வாயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.
இதையும் படிங்க: முழு வீச்சில் களத்தில் குதித்த மும்பை போலீஸ்..! சையீப் அலிகானை குத்தியவனை ஒரே நாளில் பிடிக்க தேடுதல் வேட்டை..