×
 

பட்டியல் சமூகத்திலிருந்து முதல்வர் வர வேண்டும்.. ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி சரவெடி!

பட்டியல் சமூகத்திலிருந்து ஒரு முதல்வர் வர வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் சாமி சகஜானந்தாவின் பிறந்த பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசுகையில், “ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம் இறைவனால் இறைவழி கொண்டவர் சுவாமி சகஜானந்தா. சுவாமி சகஜானந்தா தோன்றிய காலத்தில் நாம் இரண்டு சக்திகளைஎ திர்கொள்ள வேண்டியிருந்தது. அதில் ஒன்று கடவுள் இல்லை என்கிற சக்தி. கால்டுவெல் அமெரிக்க பத்திரிகையில் இந்திய கலாச்சாரம் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்று எழுதியிருந்தார்.பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு கால்டுவெல் கூறியது இந்திய கலாச்சாரத்தை நாம் முழுமையாக சீர் கெடுத்தால் மட்டுமே நாம் ஆட்சி செய்ய முடியும் என்று கூறினார். அதனால் மதமாற்றம் இங்கு நடைபெற்றது.

கிறிஸ்தவ மிஷனரிகள் இந்துக்களை தங்கள் மதத்துக்கு மாற்ற முனைந்தார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் நம்மை ஆளவந்த பிறகு நாம் எப்படி இருந்தோம்? அவர்கள் ஆள்வதற்கு முன்பு கலாச்சாரம் எப்படி இருந்தது? என்று அதையும் புரிந்து கொள்ள வேண்டும். பிரிட்டிஷ் அரசாங்கம் வந்த பிறகு பட்டியல் சமூக மக்களை, எப்படி ஆட்சி செய்தார்கள் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்
பிரிட்டிஷ் அரசாங்கம் 200 ஆண்டுகளுக்கு முன்பு மூன்று ஆளுநர்களை நியமித்து நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் ஆராய்ந்து அதிலிருந்து ஒரு அறிக்கை எடுத்து அதன் மூலம் சீர்குலைக்கும் பணியைத் தொடங்கினார்கள். 

கீழவெண்மணியில் பட்டியல் சமூகத்தினர் கொல்லப்பட்ட கிராமத்துக்கு சென்றிருந்தோம். அங்கே ஒருவருக்கு கூட சரியான வீடு இல்லை. அதனால் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் அங்கு வீடுகளை கட்டுவதற்கான திட்டத்தை செயல்படுத்துகிறோம். இங்குள்ள மக்கள் அடித்தட்டு மக்கள் வறுமையிலேயே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்
கிராம அளவில் சென்று என்ன நடக்கிறது என்று தெரிந்து கொண்டு நந்தனார் கல்வி கழகத்தை துவங்கி இந்தச் சமூகத்தை உயர்த்த முடியும் என்ற நம்பிக்கையோடு கல்வி மூலம் சமுதாயத்தை சீரமைக்க முன்னெடுத்தவர் சுவாமி சகஜானந்தா.  பட்டியல் சமூகத்து ஊராட்சி தலைவருக்கு நாற்காலி கொடுப்பதில்லை. காலணி அணிந்து கொண்டு கிராமத்தில் செல்ல முடியாது, இது போன்ற சூழ்நிலை தான் இருந்தது. அது தற்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

சுவாமி சகஜானந்தா இந்த மண்ணில் சமூக கல்வியாளராக இருந்தார். கல்வி மூலம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்ததை செயல்படுத்தி இருக்கிறார். பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களை அரசியல் காரணங்களுக்காக 200 பிரிவுகளுக்கு மேலாக பிரித்து வைத்துள்ளனர். நாம் அவர்களை ஒன்றிணைத்து வைக்க வேண்டும். பட்டியல் சமூகத்தில் இருந்து ஒரு முதல்வர் வரவேண்டும். சகஜானந்தாவின் கனவை நிறைவேற்ற உறுதி ஏற்க வேண்டும்." என்று ஆர்.என்.ரவி பேசினார்.

இதையும் படிங்க: தமிழக மீனவர்களுக்கு பிப்ரவரி 5-ந் தேதி வரை காவல்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share