ஆர்எஸ்எஸ் ஆடையில் சீமான்; செருப்பு, துடைப்பத்தால் அடித்து பெரியாரிஸ்டுகள் ஆவேசம்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் உருவப்படத்தை துடைப்பத்தால் அடித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஊர்வலமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் உருவப்படத்தை துடைப்பத்தால் அடித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஊர்வலமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சீமான் வீடு முற்றுகை:
தாய்- மகளுடன் உறவு வைத்துக் கொள்ள சொன்னவர்தான் பெரியார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீமானின் இந்த சர்ச்சைக் கருத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திமுக, திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சீமான் மீது புகார் அளித்து வருகின்றனர். இதனிடையே, பெரியார் எங்கே அப்படி பேசினார் என்பது குறித்த ஆதாரங்களை வெளியிட வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'மெயின்தான் வரணும்... பிராஞ்ச் எல்லாம் வரக்கூடாது… என்னடா காமெடி பண்றீங்க..?': கடுப்பான சீமான்..!
இதனிடையே, இதனிடையே, பெரியார் குறித்து கொச்சைக் கருத்துக்களை பரப்பி வரும் சீமான் இல்லத்தை இன்று முற்றுகையிட உள்ளதாக மே 17 இயக்கம், பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விருதலைக் கழகம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அமைப்புகளைக் கொண்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
ஆர்எஸ்எஸ் உடையில் சீமான்:
இதனையடுத்து இன்று காலை சீமான் வீட்டை முற்றுகையிடுவதற்காக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர். அப்போது ஆர்எஸ்எஸ் சீருடையில் இருக்கும் சீமான் உருவப்படத்தை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்தும், சீமானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
சீமான் வீட்டை அனுமதியின்றி முற்றுகையிட முயலும் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினரைத் தடுத்து நிறுத்துவதற்காக 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நீலாங்கரையில் உள்ள சீமான் இல்லத்திற்கு 500 மீட்டருக்கு முன்னதாகவே காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
உருட்டுக்கட்டையுடன் சீமான் தம்பிகள்:
இதனிடையே, சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் இல்லம் முன்பு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சீமான் இல்லத்தை முற்றுகையிட முயல்பவர்களை தடுத்து நிறுத்துவதற்காக நேற்றிரவு முதலே ஏராளமான நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் அப்பகுதியில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக 50க்கும் மேற்பட்டோர் கையில் உருட்டுக்கட்டையுடன் சீமான் இல்லத்தை சுற்றி பாதுகாப்பிற்கு இருப்பதால் பதற்றம் நிலவுகிறது. தங்களது தற்காப்பிற்காகவே கையில் உருட்டுக்கட்டை வைத்துள்ளதாகவும், முற்றுகையிட வருபவர்கள் எல்லை தாண்டினால் பயன்படுத்த நேரிடலாம் என்றும் நாம் தமிழர் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சீமான் வீடு முற்றுகை; கையில் உருட்டுக்கட்டையுடன் குவிந்த நாதவினர்; நீலாங்கரையில் உச்சக்கட்ட பதற்றம்!