×
 

சீமானுக்கு கொஞ்சம் மகிழ்ச்சி, கொஞ்சம் சோகம்.. தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்!

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி என்கிற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி என்கிற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

2009இல் இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்துக்குப் பிறகு அரசியலில் களமிறங்கினார் சீமான். திரைத்துறையில் இருந்து வந்த சீமான் தமிழ் தேசியம் என்கிற முழக்கத்தை முன் வைத்து அரசியலில் நுழைந்தார். நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கிய அவர், 2010இல் அதைக் கட்சியாக மாற்றினார். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் சீமான் தலைமை வகித்து செயல்பட்டு வருகிறார்.

அங்கீகரிக்கப்படாத கட்சியாக நாம் தமிழர் தேர்தலில் களமிறங்கத் தொடங்க்கியது. 2016இல் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் களமிறங்க்கிய நாம் தமிழர், 1% வாக்குகளை மட்டும் பெற்றது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து களமிறங்க்கிய நாதக, ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை என்றாலும், 4% அதிகமான வாக்குகளைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2021 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து களமிறங்கி 6.58% வாக்குகளை அக்கட்சி பெற்றது.
 இதனால் அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இந்நிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 8.22% நாம் தமிழர் கட்சி பெற்றதால், மாநில கட்சி அங்கீகாரம்  என்கிற தகுதியை எட்டியது. தேர்தல் ஆணைய விதிப்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக என்கிற நிலையை அடைய, சட்டமன்றத் தேர்தலில் 6% வாக்குகளுடன் 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் அல்லது சட்டமன்றத் தொகுதிகளில் மொத்த தொகுதிகளில் 3% இடங்களைப் பெற வேண்டும். அல்லது மக்களவைத் தேர்தலில் 6%  வாக்குகளுடன் ஒரு மக்களவை தொகுதியில் வெற்றி பெற வேண்டும். அல்லது 8%  வாக்குகளைப் பெற வேண்டும்.

இதையும் படிங்க: ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு கூடாது...காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

 நாம் தமிழர் கட்சி 8.22% வாக்குகளைப் பெற்றதால், அக்கட்சி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், "தேர்தல் சின்னங்கள் சட்டம் 1968, பிரிவு 6ஏ-ன் விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளைக் கடந்த மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி பூர்த்தி செய்திருக்கிறது. எனவே தமிழகத்தின் மாநில கட்சியாக அங்கீகாரம் வழங்கப்படுகிறது. விவசாயி அல்லது புலி சின்னம் ஒதுக்கக் கோரப்பட்டு உள்ளது. ஆனால் இந்தச் சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருப்பதால் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க முடியாது." என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மாநிலக் கட்சியாக உயர்ந்தாலும், நாம் தமிழர் கட்சி விரும்பும் சின்னம் கிடைக்கவில்லை. அக்கட்சிக்கு தேர்தல் ஆணைய பட்டியலில் உள்ள மற்ற சின்னங்கள் ஒதுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சீமானின் இமேஜை டேமேஜ் ஆக்கும் அந்த ஒற்றைப் போஸ்டர்... திணறடிக்கும் தி.க குரூப்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share