எனக்கு நியாயம் கிடைக்காது.. இதுதான் லாஸ்ட்..! வீடியோ வெளியிட்ட நடிகை..!
சீமான் விவகாரத்தில் தனக்கு நியாயம் கிடைக்க விடமாட்டார்கள் என நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்த நிலையில் அதனை நிராகரித்த உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையில் மூன்று மாத காலத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனை அடுத்து சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதன்காரணமாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜரான சீமானிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சீமான் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஏற்கனவே அரசியல் உள்நோக்கத்துடன் நடிகை விவகாரம் கையாளப்படுவதாக புகார் கூறப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: “கேவலமான பிறவி... பாலியல் குற்றவாளி”... சீமான் பெயரை சொன்னதுமே ஆவேசமான கே.பாலாகிருஷ்ணன்...!
இந்த நிலையில் சீமான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டில், புதிதாக அரசு பொறுப்பேற்றவுடன் அரசியல் காரணமாக மீண்டும் வழக்கு தொடங்கியுள்ளதாக சீமான் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், நடிகையிடம் செட்டில்மெண்ட் தொடர்பாக பேசி வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், நடிகை பாலியல் புகார் விவகாரத்தில் சீமானிடம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. மேலும், சீமான்- நடிகை தரப்பு பரஸ்பரமாக பேசி முடிவெடுக்க வேண்டுமென்றும்,இடைப்பட்ட நேரத்தில் compensation வழங்குவது குறித்து பேசி முடிவெடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு நியாயம் கிடைக்க விடமாட்டார்கள் என்றும் இனி போராட மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். தனக்காக உச்சநீதிமன்றத்தில் யாரும் வாதாடவில்லை என கூறிய அவர், சீமான் தனக்கு செட்டில்மென்ட் செய்ததால் பின்வாங்கிவிட்டேன் என நினைக்காதீர்கள் என தெரிவித்தார். தனக்கு நியாயம் கிடைக்காது, கிடைக்கவும் விடமாட்டார்கள் என கூறிய அவர், இது தான் கடைசி, இனிமேல் போராடப்போவதில்லை என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உச்சநீதிமன்றம் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது… வாய்ப்பே இல்லை… சீமான் தடாலடி..!