×
 

12ம் வகுப்பு தேர்வெழுதிய 6 மாணவிகளிடம் பிட் சோதனையின் போது சில்மிஷம்: போக்சோவில் ஆசிரியர் கைது.!

திருப்பூரில் 12 ம் வகுப்பு தேர்வெழுதிய 6 மாணவிகளிடம் பிட் சோதனை செய்வதாக சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் வெங்கமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம்வகுப்பு பொதுத்தேர்வு இன்று நடந்தது. இதில் அம்மாபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் சம்பத்குமார் தேர்வு அறை பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தேர்வு நடந்த போது தேர்வு அறையில் இருந்த 6 மாணவிகளிடம், தேர்வு அறை பார்வையாளர் சம்பத்குமார் பிட் உள்ளதா என சோதனை செய்துள்ளார்.

இதனிடையே தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவிகள் பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்து தேர்வு அறையில், தாங்கள் பிட் வைத்துள்ளனரா என்று தேர்வு அறை பார்வையாளர் சம்பத்குமார் சோதனை செய்தபோது சில்மிஷத்தில் ஈடுபட்டதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவிகள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களிடமும் இது குறித்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பாலிடெக்னிக் மாணவி பாலியல் வன்கொடுமை.. இன்ஸ்டா மூலம் 7 பேருக்கு விருந்தாக்கிய அவலம்.. மாணவர்கள் போராட்டம்..!

தகவலறிந்த உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர், மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பத்குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போக்சோ வழக்கு பதிவு செய்து தனியார் பள்ளி ஆசிரியர் சம்பத்குமாரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: திருமணத்தை மறுத்த பெண்.. உறவினர்களுக்கு பறந்த உல்லாச வீடியோ.. ஜாமீனில் வெளிவந்தவர் மீண்டும் கைது..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share