சீமான் வீட்டில் போலீஸாருக்கு காத்திருக்கும் ஷாக்… கயல்விழியின் செம ஐடியா..!
போலீஸ் என்ன செய்யும்? என்கிற நோக்கத்தில் இந்த நோட்டீஸ் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கயல்விழியின் இந்த செயலை நாதக தம்பிமார்கள் சிலாகித்து வருகின்றனர்.
சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக, நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று பாலவாக்கத்தில் உள்ள சீமான் இல்லத்துக்குச் சென்ற வளசரவாக்கம் போலீஸார், சீமான் வீட்டில் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் ஒட்டினர். அப்போது அங்கிருந்த சீமானின் உதவியாளர் அந்த சம்மனை கிழித்ததாகக் கூறப்படுகிறது.
சீமான் வீட்டுக்குள் செல்ல முயன்ற காவல்துறையினரை அங்கிருந்த காவலாளி அமல்ராஜ் தடுத்து நிறுத்தியபோது ஏற்பட்ட தகராறில், காவலர்களை அமல்ராஜ் தாக்கியதாகவும், அவரிடமிருந்த துப்பாக்கியை போலீஸார் கேட்டதற்கு மறுத்துவிட்டதாகவும் பரபரப்பு நிலவியது. சீமான் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஓசூர் சென்ற நிலையில், பாலவாக்கத்தில் நடந்த இச்சம்பவம் நாதக கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: அந்த வீராப்பு என்னாச்சு அண்ணே… பதறியடித்து ஃப்ளைட் பிடித்து ஓடி வரும் சீமான்..!
இதனைத் தொடர்ந்து, ஈரோடு இடைத்தேர்தலில் வெடிகுண்டு வீசுவதாக பேசி இருந்த சீமானுக்கு ஈரோடு போலீசார் இரண்டாவது முறையாக சம்மன் வழங்க சென்னை வந்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக - நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்து வந்தார். அப்போது வெடிகுண்டு வீசுவதாக பொதுமடையில் பேசி இருந்தார். இது தொடர்பாக ஈரோடு, கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது மூன்று பிரிவின் கீழ் அழக்குப்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கலவரத்தை தூண்டுவது, பொது மக்களை அச்சுறுத்துவது, மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 17ஆம் தேதியே சீமானுக்கு சமன் வழங்கப்பட்டது. சீமானின் வீட்டுக்கு சென்று சம்மன் அளித்த போலீசார், 20 ஆம் தேதி நீங்கள் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் கொடுத்து விட்டு வந்தனர். இந்த சம்மனை பெற்றுக் கொண்ட சீமான் நேரில் ஆஜராகவில்லை. அதற்கு பதிலாக அவரது வழக்கறிஞர் நன்மாறன் என்பவர் ஆஜராகி விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் கருங்கல்பாளையத்தில் வெடிகுண்டு வீசுவதாகக் கூறிய வழக்கில் சீமான் ஆஜராக வேண்டும் என்று இரண்டாவது முறையாக சம்மன் வழங்குவதற்காக ஈரோடு போலீசார் தற்போது சென்னை வந்திருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்று நேரடியாக சம்மனை வழங்க இருப்பதாகவும் காவல்துறை தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் அதனை எதிர்க்கொள்ளும் வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டின் முன்புறம் நோட்டீஸ் போர்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில்,''சம்மனை ஒட்டு சார்வு செய்ய விரும்பும் காவல் அதிகாரிகள் இங்கே ஒட்டி செல்லவும்'' என்கிற வாசகம் இடம்பெற்றுள்ளது. போலீசார் சம்மன் ஒட்ட வருவதாக கிடைத்த தகவலை அடுத்து சீமான் வீட்டின் முன்புறம் நோட்டீஸ் போர்டு ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
சுவற்றில் ஒட்டினால் கிழிக்கத்தான் முடியும். சம்மனை கிழித்தால் தானே போலீஸார் வழக்குப்பதிவு செய்து பிரச்னை கிளப்புவார்கள். நோட்டீஸ் போர்டில் ஒட்டினால், சம்மனை கிழிக்காமல், அதனை அப்படியே வீட்டிற்குள் எடுத்துச் செல்லலாம். போலீஸ் என்ன செய்யும்? என்கிற நோக்கத்தில் இந்த நோட்டீஸ் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கயல்விழியின் இந்த செயலை நாதக தம்பிமார்கள் சிலாகித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சீமான் வீட்டு காவலர்களுக்கு மார்ச் 13 வரை நீதிமன்ற காவல்!