விசிக - திமுக கூட்டணி வலுவாக உள்ளது.. சொல்லி அடிக்கும் திருமா
விடுதலை சிறுத்தை கட்சியை பொறுத்தவரையில் திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்று அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உறுதிப்பட தெரிவித்துள்ளார்
விடுதலை சிறுத்தை கட்சியை பொறுத்தவரையில் திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்று அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உறுதிப்பட தெரிவித்துள்ளார்திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்திருப்பது, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்றும் மாநில அரசு முழுமையாக போதை பொருள்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 200 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்து வருகிறார் எங்களை பொறுத்தவரை திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. திமுக கூட்டணி தமிழ்நாட்டில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்பது உறுதி. இந்நிலையில் எதிர் கட்சிகள் ஒரே அணியில் திரள்வார்கள் என்பதற்கான எந்த நம்பிக்கையும் இல்லை என்றார்தொடர்ந்து பேசிய திருமாவளவன் வேல்முருகன் தொடர்ந்து திமுக கூட்டணியில் நீடிப்பார் என்று நான் நம்புகிறேன், நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார்
இதையும் படிங்க: "அம்பேத்கர் என்றால் பிளவர் அல்ல ஃபயர்" ..புஷ்பா பட பாணியில் பேசிய அன்பில் !