×
 

சீமான் கதறக் கதற... தம்பிகள் பதறப் பதற... நாதகவில் இருந்து 3000 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய திமுக..!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய 3000 பேர் நாளை திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய 3000 பேர் நாளை திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பெரியார் குறித்து சீமான் பேசிய சர்ச்சை கருத்துக்கள் “எரியும் கொள்ளிக் கட்டையை எடுத்து தலையைச் சொறிந்து கொண்டது” போல மாறி வருகிறது. பெரியாரை வாய்க்கு வந்தபடி சீமான் வசைபாடியது தமிழக அரசியல் களத்தில் மட்டுமல்ல, மக்களிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதாக குற்றச்சாட்டி ஏராளமான நாதக தொண்டர்கள் கட்சியை விட்டு விலகி வருகின்றனர். நாம் தமிழர் கட்சியில் சீமான் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், தொடர்ந்து பெரியார் குறித்து அவர் பேசி வருவதால் சமுதாயத்தில் கட்சி மீதும், கட்சி தொண்டர்கள் மீதும் எதிர்ப்பு நிலவுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

கட்சி நிர்வாகிகளின் பேச்சை சீமான் துளியும் கேட்பது கிடையாது, அவர் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதற்காகவா? நாங்கள் பணத்தை செலவு செய்து கட்சிக்காக உழைக்கிறோம் என நாதக தொண்டர்கள் ஆதங்கப்படுகிறார்கள். இதற்கெல்லாம் செவி சாய்க்காத சீமான் தன்னிச்சையாக செயல்படுவது நாதக முக்கிய நிர்வாகிகளையே அதிருப்தி அடைய வைத்துள்ளது. இப்படி அதிருப்தி காரணமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பு திமுகவின் மாணவரணியைச் சேர்ந்த ராஜீவ் காந்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: 'திராவிடம் என்பது ஏமாற்று வேலை. அது இனி தமிழகத்தில் உதவாது...' சீமானுக்கு ராதாரவி தீவிர ஆதரவு..!

சமீப காலமாக சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, பென்னாகரம் என பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நாம் தமிழர் தம்பிகள் ஏராளமானோரை ராஜீவ் காந்தி திமுகவில் இணைத்து வருகிறார். இதனிடையே நாளை அண்ணா அறிவாலயத்தில் வைத்து 3000 நாம் தமிழர் கட்சியினரை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதில் சீமானுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் செய்தி என்னவென்றால், இந்த பட்டியலில் அடிமட்ட தொண்டர்கள் மட்டுமின்றி, முக்கிய நிர்வாகிகள், சீமானுக்காக தேர்தல் களத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆகியோரும் அடக்கம் எனக்கூறப்படுகிறது. 
நாளை 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழகர் வேட்பாளர்களும் அடக்கம் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக 38 மாவட்டங்களையும் சேர்த்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் இணைய திட்டமிட்டுள்ளனர். இந்த செய்தி நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

இதையும் படிங்க: ஏய்..! பெரியாரிஸ்டுகளே... முதல்ல உங்க வீடுகள்ல அம்பேத்கர் போட்டோ இருக்கா..? நேரடி சவால் விட்ட சீமான்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share