×
 

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்; முழு அரசியல்வாதியாக மாறிய விஜய் - 120 மாவட்ட செயலாளர்களுக்கு நேருக்கு நேர் போட்ட கன்டிஷன்! 

ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களையும் தனித்தனியாக நேர்காணல் செய்யும் விஜய், அவர்களுக்கு தனது உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயத்துடன் நியமன கடிதத்தை வழங்கி வருகிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் பதவிக்கு பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் வெளியாகின. விழுப்புரம் மாவட்டத் தலைவராக உள்ள குஷி மோகன் என்பவர் நகரச் செயலாளர் பதவிக்கு 15 லட்சம் ரூபாய் கேட்பதாக அம்மாவட்ட வாட்ஸ் அப் குழுவில் தொண்டர் ஒருவர் பதிவிட்டது வைரலானது. தமிழக வெற்றிக் கழகத்தில் மொத்தம் 19 அணிகள் உள்ளன. இதில் தலைவர், செயலாளர், பொருளாளர் என பல பதவிகள் உள்ளன. இந்த ஒவ்வொரு பதவிக்கும் ஒவ்வொரு தொகையை நிர்ணயித்து வசூல் வேட்டை நடப்பதாகவும், இதனை தலைமையேற்று நடத்துவதே புஸ்ஸி ஆனந்த் தான் என்றும் புகார்கள் கிளம்பின. 

சோசியல் மீடியாவில் வாட்ஸ்அப் சாட்டிங்குகள் வைரலான நிலையில், இந்த விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்யே நேரடியாக தலையிட்டதாக கூறப்பட்டது. பதவிகளை நியமிக்க பணம் வாங்கினால் பதவி பறக்கப்படும் என விஜய் கடுமையான வார்னிங் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக நிர்வாகிகள் சிலர் வசூல் வேட்டையில் ஈடுபடுவது புஸ்ஸி ஆனந்திற்கும் தெரியும் என்ற தகவல் வெளியான நிலையில், விஜய் கொடுத்த எச்சரிக்கை புஸ்ஸி ஆனந்திற்கும் சேர்த்தே என்கின்றனர் தவெக தொண்டர்கள். 

இதனிடையே, தனது மேற்பார்வையில் மாவட்ட செயலாளர்கள் பட்டியலை விஜய் தயார் செய்துள்ளதாகவும், பனையூர் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களை அழைத்து அவரே நியமன கடிதம் வழங்கவுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், 234 தொகுதிகளையும் உள்ளடக்கிய 120 மாவட்ட செயலாளர்களுக்கு தவெக தலைவர் விஜய் நேரடியாக நியமன ஆணைகளை வழங்கி வருகிறார். 

இதையும் படிங்க: “ஆளுநர் மாளிகைக்கு வாங்க” - தவெக தலைவர் விஜய்-க்கு அழைப்பு விடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி! 

ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களையும் தனித்தனியாக நேர்காணல் செய்யும் விஜய், அவர்களுக்கு தனது உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயத்துடன் நியமன கடிதத்தை வழங்கி வருகிறார். அப்போது மாவட்ட நிர்வாகிகளிடம் விஜய் மக்கள் இயக்கமாக இருந்த போது என்னென்ன மாதிரியான களப்பணியாற்றினீர்கள், கட்சி தொடங்கி ஓராண்டு ஆகவுள்ள நிலையில் என்னென்ன சமூக பணிகளை மேற்கொண்டுள்ளீர்கள் என்றெல்லாம் விஜய் நேரடியாக கேள்வி எழுப்பி வருகிறாராம். மேலும் மாவட்ட செயலாளர்களிடம் பதவிக்கு பணம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தால் பதவி பறிக்கப்படும் என நேரடியாக எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதன் மூலமாக புஸ்ஸி ஆனந்த் தான் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கிறார், விஜய் கட்சியைக் கண்டுகொள்வதில்லை என்றும், தவெகவில் பதவி வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என்றும் தீயாய் பரவி வந்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு இந்த ஒரே சந்திப்பில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தவெக தலைவர் விஜய். 

இதையும் படிங்க: 117 மாவட்ட செயலாளர்கள்...முதல் பட்டியலில் 25 பேர் அறிவிப்பு...விஜய் ஆசி...பட்டியல் இதுவா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share