வண்டிக்கு வாடகை தரக்கூட காசில்லையா?... உழைச்ச பணத்த கொடுக்கலன்னா ஆடியோ வெளியாகும் - தவெக தலைவர் விஜய்க்கு அடுத்த சிக்கல்!
மில்டன் என்ற நபர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பொருளாளர் வெங்கட், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் என அனைவரையும் குறிப்பிட்டு, டேக் செய்து பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவு தான் அது.
காஞ்சிபுரத்தில் பரந்தூர் போராட்டக்குழுவினரை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்தித்ததில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சம் கிடையாது. அப்பாவி விவசாயிகளுக்கு ஆதரவாக வந்திருக்கிறேன் என விஜய் பேசிய பேச்சைக் கேட்டு தவெகவினர் சிலிர்த்துப் போனாலும், மத்திய மாநில அரசுகளை அவர் விமர்சித்தது அரசியல் களத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தாமல் இல்லை. திமுக, பாஜக, காங்கிரஸ் என பல கட்சிகளும் விஜய்க்கு ரவுண்ட் கட்டி பதிலடி கொடுத்து வருகின்றன. ஏற்கனவே கட்சிக்குள் புஸ்ஸி ஆனந்தால் உட்கட்சி பூசல், ஜான் ஆரோக்கியசாமி ஆடியோ லீக், பதவிக்கு பணம் கேட்கிறார்கள் என அடுத்தடுத்து புற்றீசல் போல பிரச்சனைகள் தவெகவில் இருந்து கிளம்பி வந்து கொண்டிருக்கின்றன.
இதற்கெல்லாம் விஜய் என்ன மாதிரி ரியாக்ட் செய்யப்போகிறார் என ஒட்டுமொத்த அரசியல் வட்டாரமும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், சோசியல் மீடியாவில் தவெக பற்றிய மற்றொரு தகவல் தீயாய் பரவி வருகிறது. மில்டன் என்ற நபர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பொருளாளர் வெங்கட், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் என அனைவரையும் குறிப்பிட்டு, டேக் செய்து பதிவிட்டுள்ள எக்ஸ் தள பதிவு தான் அது.
இதையும் படிங்க: பதவிக்கு வசூல் வேட்டையா? - சூனா பானா ஸ்டைலில் பஞ்சாயத்தை கலைத்துவிட்ட பார்க்கும் புஸ்ஸி ஆனந்த்... தகிக்கும் தவெக தொண்டர்கள்!
விஜய் பரந்தூருக்கு விசிட் செய்த போது, ஏகனாபுரத்தைச் சேர்ந்த தாய்மார்கள் அங்கிருந்து 12 வேன்கள் மூலமாக வீனஸ் திருமண மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை எல்லாம், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும், காஞ்சிபுர மாவட்ட பொறுப்பாளர் தென்னரசும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான ஷஜியும் செய்திருக்கிறார்கள். அதற்கான வண்டி வாடகையாக 54 ஆயிரம் ரூபாய் பேசப்பட்டு, அட்வான்ஸாக 9 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதிப்பணமான 45 ஆயிரம் ரூபாயை நிகழ்ச்சி முடிந்ததும் தருவதாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் தென்னரசு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஷிஜி ஆகிய மூவரும் வாக்குறுதி கொடுத்ததாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த 3 நாட்களாக பணம் கொடுக்காமல் ஓட்டுநர்களை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக புஸ்ஸி ஆன்ந்தும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான ஷஜியும் ஓட்டுநர்களின் தொலைபேசி அழைப்புகளை எடுப்பதே இல்லை என்றும், இதனால் உள்ளூரைச் சேர்ந்த தென்னரசுவிற்கு ஓட்டுநர்கள் நெருக்கடி கொடுப்பதாகவும் மில்டன் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் போராடிய மக்களைப் போலவே வண்டி ஓட்டிய ஓட்டுநர்களும் அன்றாடங்காய்ச்சிகள் தானே? என்றும், அவர்களது வயிற்றில் அடிப்பது நியாயமா? என்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கே டேக் செய்து நேரடி கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு படி மேலே போய், “தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாத தற்குறியாக விஜய் இருக்கிறாரா? இல்லை இவரே செலவு கணக்கு எழுத சொல்லி விட்டு காசை வெளியே எடுக்காமல் இருக்கிறாரா?” என விஜயை நேரடியாக அட்டாக் செய்துள்ளார்.
மில்டன் என்ற அந்த நபர் தனது பதிவின் இறுதியில், “பரந்தூர் மக்களிடமும் போராட்டக்காரர்களிடமும் வாகன ஓட்டிநர்கள் வேதனையோடு பேசும் ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், தேவைப்பட்டால் உங்களுக்கே அனுப்பவும் சொல்கிறேன். பரந்தூர் மக்கள் மத்தியில் உங்கள் பெயர் நாறிப்போய் இருக்கிறது. அவர்களுக்கு நியாயமாய் சேரவேண்டிய உழைத்த பணத்தை ஒப்படையுங்கள். புகார் தெரிவிக்க விரும்பும் தவெக நிர்வாகிகளால், உங்களை தொடர்பு கொள்ளவே இயலவில்லை. நடத்துவது கட்சி தானா ???” என சரமாரியாக விமர்சித்துள்ளார்.
ஒரு அதிர்ச்சி தகவல்🚨
— Milton (@Milton_Off) January 23, 2025
நடிகர் விஜய் பரந்தூர் போராட்டத்திற்கு ஆதரவளிக்க சென்றதை ஆஹா.. ஓஹோ என கொண்டாடிய நண்பர்களே… தவெக தோழர்களே…
விஜயை சந்திக்க ஏகனாபுரத்து மக்கள் வீனஸ் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர் என்பதை அறிவீர்கள் தானே.
அம்மக்களை அழைத்துவர 12 வேன்கள் தவெக சார்பில்… pic.twitter.com/SY1FlIFSjL
விஜய் மக்களுக்காக கிறிஸ்டல் கிளீயர் அரசியல் செய்கிறார் என்று சிலாகித்த நியாயவான்களே இப்போது வாய் திறங்கள் என விஜய் ஆதரவாளர்களையும் வெளுத்து வாங்கியுள்ளார். தற்போது சோசியல் மீடியாவில் இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், எதை நம்புவது, யாரை நம்புவது எனத் தெரியாமல் தவெக தொண்டர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
இதையும் படிங்க: விஜய் கையில் கிடைத்த முக்கிய கடிதம்...’அவங்களை வெயிட் பண்ண சொல்லுங்க’ உடனடியாக பறந்த சிக்னல்...