ஒரு வழியா சொல்லிட்டாரு பா..! திமுகவை நேரடியா அட்டாக் செய்த விஜய்..!
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது மகளிர் தின வாழ்த்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுக அரசை அகற்றுவோம் என தனது மகளிர் தின வாழ்த்து வீடியோவில் தவெக தலைவர் விஜய் உறுதிப்பட கூறியுள்ளார்.
இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை ஒட்டி பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மகளிர் தினத்தை ஒட்டி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழ்நாடு முழுவதும் உள்ள தனது அம்மா, அக்கா, தங்கை, தோழி என அனைவருக்கும் தனது மகளிர் தின வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய் முகத்தில் கறி பூசிய அண்ணாமலை... ஆதாரங்களை அள்ளி வீசி அதிரடி...!
பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷத்தை உணர முடியும் என்று கூறிய விஜய், பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது, அனைவரும் சேர்ந்து தான் திமுக அரசை தேர்ந்தெடுத்தோம் என்று தெரிவித்தார். ஆனால் அவர்கள் நம்மை இப்படி ஏமாற்றுவார்கள் என்று இப்போது தான் தெரிகிறது என்று அந்த வீடியோவில் பேசியுள்ள விஜய், எல்லாமே மாறக்கூடியது, மாற்றத்திற்கு உரியது என்றும் தெரிவித்தார்.
பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய அவர்களை மாற்றுவோம் எனவும் கவலைப்படாதீர்கள்., 2026-ல் மாற்றத்தை ஏற்படுத்தி மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்வோம்., உங்களோடு அண்ணனாக தம்பியாக தோழனாக எப்போதும் உடன் நிற்பேன் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நதிகளுக்கு பெண்கள் பேர் வெச்சா போதுமா..? மரியாதை கொடுக்கணும்பா... அன்புமணி அறிக்கை..!