புற்றுநோய் மற்றும் அரிதான நோய்களுக்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு முழுமையாக சுங்கவரி விலக்கு அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8-வது பட்ஜெட்டை நாடாளுமந்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அவர் கூறுகையில் புற்றுநோயாளிகள் மற்றும் அரிதான நோயினால் பாதிக்கப்படும் நோயாளிகளின் உயிர்காக்கும் 36 வகையான இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. ஏற்கெனவே சுங்கவரி விலக்கில் இருக்கும் மருந்துகளோடு கூடுதலாக 37வகை மருந்துகள் சேர்க்கப்படும், நோயாளிகளுக்கான 13 புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படும்.

உயிர்காக்கும் மருந்துகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வந்தது. அது நீக்கப்படுகிறது. இதனால் புற்றுநோய் மற்றும் அரிதான நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு பெரிய நிவாரணமாக அமையும்.
இதனால் புற்றுநோய்க்கு பயன்படுத்தப்படும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ட்ராஸ்டுஸ்மாப், ஓசிமெர்ட்னிப், துருவாலுமாப் ஆகிய மருந்துகளுக்கு சுங்கவரி விலக்கும், குறைவான ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளஇல் மருத்துக் கல்விக்கான வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வரும் ஆண்டில் மருத்துவக் கல்வியில் புதிதாக 10ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும், அடுத்த 5 ஆண்டுகளில் இது 75 ஆயிரமாக அதிகரிக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 1.30 லட்சம் மருத்துவ இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன “ எனத் தெரிவித்தார்.
லான்செட் ஆய்வில் “ இந்தியாவில் 12 லட்சம் புதிய புற்றுநோயாளிகளும், 2019ம் ஆண்டு புற்றுநோயால் மட்டும் 9.30 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுஆசியாவிலேயே புற்றுநோய் உயிரிழப்பில் அதிகமாகும். 2020ம் ஆண்டில் 13.90 லட்சம் பேரும், 2021ல் 14.20 லட்சம் பேரும், 2022ம் ஆண்டில் 14.60 லட்சம் பேரும் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பட்ஜெட் 2025: எந்த பொருட்கள் விலை உயரும், எது குறையும்? முழு லிஸ்ட் இதோ