முசாபர்பூர் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் ஓஜா என்பவர் நேற்று முந்தினம் இந்த புகாரை பதிவு செய்து, சோனியா காந்திக்கு எதிராக முதல்தகவல் அறிக்கையும் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரினார். நாட்டின் முதல் குடிமகளான குடியரசுத் தலைவர் தெளரபதி முர்முவை அவமதிப்பு செய்யும் விதத்தில் பேசியது தவறு என்று தெரிவித்தார்.
இந்த வழக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, எம்.பி. பிரியங்கா காந்தி இருவர் மீதும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓஜா தெரிவித்தார். முசாபர்பூர் நீதிமன்றத்தில் புகார் அளித்த பின், ஓஜா நிருபர்களுக்கு அளி்த்த பேட்டியில் “ நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் தெளரபதி முர்பு பேசிவிட்டு சென்றபினஅ அவர் குறித்து சோனியா காந்தி பேசியது அவமானப்படுத்துகாகும்.
இந்த வழக்கில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியையும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட வேண்டும். இவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். இந்த வழக்கு வரும் 10ம் தேதி முசாபர்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க: சாதி குறித்த பேச்சு: வார்த்தையை திரும்பப் பெற்றார் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும்போது குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் தெளரபதி முர்மு பேசிய குறித்து சோனியா காந்தியிடம் நிருபர்கள் கேட்டபோது “ உரையின் முடிவில் குடியரசுத் தலைவர் சோர்ந்துவிட்டார், மோசமான விஷயங்களை கஷ்டப்பட்டுதான் பேசமுடியும்” எனத் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவரின் பேச்சு “போர் அடிப்பதாக” இருந்தது என ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் தெரிவித்தனர். சோனியா காந்தி, ராகுல் காந்தி பேச்சு குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் “ குடியரசுத் தலைவர் குறித்து காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் தெரிவித்த கருத்துகள், குடியரசுத் தலைவர் அலுவலகத்தின் மாண்பைக் குலைத்தது, இது ஏற்க முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: “திமுக கொத்தடிமை திருமாவுக்கு எங்களப் பத்தி பேச என்ன அருகதை இருக்கு”... கொந்தளித்த ஜெயக்குமார்!