13-வது சென்னை பன்னாட்டு ஆவணப்படம் மற்றும் குறும்படங்கள் திருவிழா வருகிற 21-ந் தேதி சென்னையில் தொடங்கி 28-ந் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுபக்கம் என்ற அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் பன்னாட்டு ஆவணப்படம் மற்றும் குறும்படங்கள் திருவிழா சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திரையிடல்கள் சென்னையின் பல்வேறு திரையரங்குகளில் 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை ஒருவார காலத்திற்கு நடைபெற உள்ளது.

மறுபக்கம் அமைப்போடு சேர்ந்து வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் பிரிவு, சென்னை கிறித்தவக் கல்லூரி, ஏஷியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம், அண்ணா பல்கலையின் மீடியா சயின்ஸ், எத்திராஜ் மகளிர் கல்லூரியின் காட்சி தொடர்பியல் பிரிவு உள்ளிட்ட நிறுவனங்ள் பங்கேற்று இந்த திருவிழாவை முன்னெடுக்கின்றன.
இதையும் படிங்க: தந்தையை அடித்தே கொன்ற அன்பு மகன்..! பரிதாபமாக உயிரிழந்த போலீஸ் எஸ்ஐ.. சென்னையில் பரபரப்பு
இந்திய ஆவணப்படங்கள், சர்வதேச ஆவணப்படங்கள், இந்திய குறும்படங்கள், சர்வதேச குறும்படங்கள், பரிட்சார்த்த முயற்சிகள் - அனிமேஷன் படங்கள் - செல்போனில் எடுக்கப்பட்ட படங்கள் ஆகிய 5 பிரிவுகளில் இந்த படங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
திரைக்கலைஞர் மற்றும் ஆசிரியரான சேஜோ சிங், திரைக்கலைஞர் பாபு ஈஸ்வர் பிரசாத், தயாரிப்பாளர் மீரா சௌத்ரி, திரைக்கலைஞர் முதித் சிங்கால், மறுபக்கம் அமைப்பின் அமுதன் ஆகியோர் தேர்வுக்குழுவினராக செயல்பட்டு ஆவணப்படங்களை தேர்வு செய்துள்ளனர்.

கமர்ஷியல் படங்களுக்கு இணையாக ஆவணப்படங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் கடந்த 12 ஆண்டுகளாக மறுபக்கம் அமைப்பு இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டு ஆஸ்கர் வென்ற எலிபெண்ட் விஸ்பரர் ஒரு ஆவணப்படம் என்ற வகையில், இந்தியாவில் ஆவணப்படங்கள் மீதான பார்வை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: தரம் குறையுமா? தடைபடுமா? - சர்ச்சையில் காலை உணவுத்திட்டம் - சென்னையில் வெடித்த சிக்கல்!