கொரோனா காலத்தில் அதிக வட்டி விகித்த வழக்கில் ரிசர்வ் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2020ம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா பாதிப்பு 3 ஆண்டுகள் வரை நீடித்தது. கொரோனா பரவல் உலகையே புரட்டிப்போட்டது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி மக்கள் உயிரிழந்ததால் போக்குவரத்துக்கு தடை, மக்கள் ஒன்றாக கூட தடை என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலானது.
நோய் தொற்றால் மக்கள் வீடுகளில் முடங்கினத். போக்குவரத்து இல்லாமல் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டன. ஊரடங்கு உத்தரவால் வேலையிழப்பு அதிகரித்தது. பலர் செய்து கொண்டிருந்த வேலையை இழந்து தவித்தனர். பொருளாதார நெருக்கடி, நோய் தொற்று என பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டனர். இந்த காலக்கட்டத்தில் வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு அதை சரியாக கட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

வேலை இழப்பு, சம்பளம் குறைப்பு, வேலையின்மை காரணமாக இஎம் ஐ உள்ளிட்ட வங்கி கடன்கள் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இந்த பேரிடர் காலத்திலும் பெரும்பாலான வங்கிகள் வட்டியை தள்ளிபடி செய்யாமல் கரார் காட்டின. ஆனால், கடன் தவணை தொகையை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது. சில வங்கிகள் கட்டாத தொகைக்கு அதிக வட்டியை வசூலித்தன.
இதையும் படிங்க: வீடு, வாகனக் கடன் இஎம்ஐ குறையும்! கடனுக்கான வட்டிவீதத்தை குறைத்தது ரிசர்வ் வங்கி
இந்நிலையில் சாந்திகுமாரி என்பவர் கொரோனா காலத்தில் தனியார் வங்கியில் கடன் பெற்றுள்ளார். தனக்கு அதிக வட்டி விகித்திருப்பதாகவும், அதை பெற முடியாமல் தவிப்பதாகவும் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதன் மீதான விசாரணை இன்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி லாக்டவுன் காலத்தில் அதிக வட்டி வசூலிப்பதை ஏற்று கொள்வது சரியானது இல்லை என்றதுடன், கொரோனா காலத்தில் அதிக வட்டி வசூலிக்கும் 4வங்கிகளுக்கு எதிரான புகாரை பரிசீலிக்கும்படி ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டார். இந்த புகார் மனுக்களை ரிசர்வ் வங்கி பரிசீலித்து வட்டி விகிதத்தை குறைத்தால் கடனில் தவிக்கும் சிலர் பலனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரூ.1,100 கோடி வரி செலுத்த மின்சார வாரியத்திற்கு நோட்டீஸ்.. ஜிஎஸ்டி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நிறுத்தம்..!