சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பதவி வகித்த நீதிபதிகள் ஆர்.சக்திவேல் மற்றும் பி.தனபால் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்று கொண்டனர். சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நீதிபதிகள் ஆர்.சக்திவேல் மற்றும் பி.தனபால் ஆகியோர் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் இருவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் அளித்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதையும் படிங்க: திமுக எம்எல்ஏ-வை விடுதலை செய்தது செல்லாது... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!
இதன்படி, நீதிபதிகள் ஆர்.சக்திவேல் மற்றும் பி.தனபால் ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்று கொண்டனர்.

அவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே ஆர் ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் 10 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எனக்கு ஜாமீன் வேணும்... சென்னை ஐகோர்ட்டில் சீமான் வீட்டு பாதுகாவலர் மனு..!