பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்க நடவடிக்கை எடுப்பது போல் சீனா ஆக்கிரமித்து இருக்கும் நமது நிலப்பகுதியையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வலியுறுத்தி இருக்கிறார்.
லண்டனில் பேசிய மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் திருடப்பட்ட பகுதி திரும்ப பெறப்பட்ட பிறகு காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று கூறி இருந்தார் .

"அரசியல் சட்டம் 370 வது பிரிவை நீக்குவது முதல் படி ஆகும். காஷ்மீரில் வளர்ச்சி பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சமூக நீதியை மீட்டு எடுப்பது இரண்டாவது படியாகும். மிக அதிக வாக்குப்பதிவோடு தேர்தல்களை நடத்துவது, மூன்றாவது படியாக நாங்கள் கருதுவது சட்ட விரோதமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரில் திருடப்பட்ட பகுதியை திரும்ப பெறுவதாகும் என்று நான் நினைக்கிறேன். அது முடிந்ததும் காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்படும் என்று உங்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன்" என்று அவர் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: 10 பேருக்கு பிரதமர் மோடி விட்ட சவால்..! இந்திய மக்கள் உடல் நலன் மீது இவ்வளவு அக்கறையா..?
இதற்கு பதில் அளித்த காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, மத்திய அரசை கடுமையாக சாடினார். மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பதை இந்த அரசை யார் தடுக்கிறார்கள்? என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மத்திய அரசு ஏன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியை உடனடியாக மீட்டெடுக்கவில்லை? என்று கேட்ட அவர் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் குறித்து ஏன் எந்த விவாதமும் இதுவரை இல்லை என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

"பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருக்கும் ஜம்மு காஷ்மீரின் பகுதியை நாங்கள் திரும்பப் பெறுவோம் என்று வெளியுறவு அமைச்சர் கூறுகிறார். அவர்களை யார் தடுத்தது? அதை திரும்பப் பெற வேண்டாம் என்று நாங்கள் எப்போதாவது கூறி இருக்கிறோமா? என்று மாநில சட்டமன்றத்தில் பேசும்போது முதல்வர் அப்துல்லா கூறியிருக்கிறார்.
"பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்டெடுக்க இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவ்வாறு செய்ய இந்தியா தவறிவிட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியை மத்திய அரசு திரும்பப் பெறும்போது தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீர் பகுதியையும் மீட்டெடுக்க வேண்டும். அப்படி செய்தால் நாங்கள் உங்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம்" என்று உமர் அப்துல்லா மேலும் கூறினார்.
"கார்கில் போரின் போது பாகிஸ்தான்ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை திரும்ப பெற ஒரு வாய்ப்பு இருந்தது. நீங்கள் அவ்வளவு விருப்பமாக இருந்திருந்தால் அந்த பகுதியை மீட்டு இருப்பீர்கள். ஆனால் எது உங்களை தடுத்தது? ஜம்மு காஷ்மீரின் வரைபடத்தை பார்க்கும் போது ஒரு பகுதி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது நன்றாக தெரியும். ஆனால் நீங்கள் அதைப் பற்றி பேசுவதில்லை" என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

1931 இம் ஆண்டு ஸ்ரீநகர் மத்திய சிறைக்கு வெளியே தோக்ரா மகாராஜாவின் வீரர்களால் கொல்லப்பட்ட 22 பேரை கௌரவிக்கும் வகையில் ஜூலை 13 ஜம்மு காஷ்மீரில் பொது விடுமுறையாக கடைப் பிடிக்கப்பட்டது. இருப்பினும் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தேசிய மாநாட்டு( என் சி ) நிறுவனர் ஷேக் முகமது அப்துல்லாவின் பிறந்தநாளை குறிக்கும் டிசம்பர் 5 விடுமுறைகளுடன் சேர்த்து இந்த விடுமுறையும் ரத்து செய்யப்பட்டது.
அவர்கள் செய்த ஒரே தவறு அவர்கள் முஸ்லிம்களாக இருந்தது தான். நாட்டின் பிற பகுதிகளில் எதேச்சதிகாரத்திற்கு எதிராக கிளர்ந்து எழுந்த மக்கள் மதிக்கப்படுகிறார்கள். அவர்களை யாரும் துரோகிகள் என்று முத்திரை குத்த முடியாது" என்றும் அவர் மேலும் கூறினார்.
ஏற்கனவே ஜெய்சங்கரின் கருத்துகளுக்கு பதில் அளித்த பாகிஸ்தானும் ஜம்மு காஷ்மீரின் இறுதி நிலையை ஐநாவின் அனுசரணையில் சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற பொது வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்க வேண்டும் என்று தொடர்புடைய ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் கூறுவதாக சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'காங்கிரஸ் கட்சியை முடித்து விடுங்கள்..' டெல்லி தோல்வியால் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆவேசம்..!