×
 

டெல்லியில் 8 மணி நேரத்தில் 3 கார்கள் - எடப்பாடியாரின் மாஸ்டர் பிளான்..! தவிக்கவிட்ட விவசாயி மகன்..!

எடப்பாடி பழனிசாமி அமித் ஷா வீட்டிற்கு வந்த வெளியில் வெகுநேரமாக காத்திருந்த செய்தியாளர்கள் அவர் சென்ற ஆடி காரையே எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

நேற்று காலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் இந்த டெல்லி பயணம் பலரது புருவங்களை உயர்த்தியது.

இதையடுத்து, டெல்லியில் பாஜக தலைவர்களைச் சந்திக்கப் போகிறாரா? மீண்டும் பாஜகவுடன் கூட்டணி உருவாகிறதா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. விமான நிலையத்தில் செய்தியாளர்கள், நீங்கள் முக்கியமான நபரைச் சந்திக்க வந்திருக்கிறீர்களா? என்று கேட்டபோது எடப்பாடி பழனிசாமி அதை மறுத்தார். "நான் எதற்காக டெல்லி வந்திருக்கிறேன் என்று தெரியாமல் கேட்கிறீர்களே... நான் கட்சி ஆஃபீஸை பார்ப்பதற்காக வந்திருக்கிறேன்" என்று மட்டும் கூறினார்.

பிறகு டெல்லியில் புதிதாகத் திறக்கப்பட்ட அதிமுக அலுவலகத்திற்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, அதைப் பார்வையிட்டார். மாலையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணியும் கே.பி.முனுசாமியும் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இதையும் படிங்க: அண்ணாமலையை ஓரம் கட்டிய அமித் ஷா… அதிமுக-வை டீல் செய்ய புதியவர் நியமனம்- இ.பி.எஸ் நிம்மதி..!

அதிமுக எம்.பி., தம்பிதுரை முதலில் அமித் ஷாவின் இல்லத்திற்குச் சென்றார். பிறகு சுமார் 8 மணியளவில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அங்கே சென்றனர். இந்தச் சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, தம்பிதுரை உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். இந்தச் சந்திப்பு இரண்டு மணிநேரம் நீடித்ததாகத் தெரிகிறது. அமித் ஷா உடனான சந்திப்பு முடிந்து வெளியில் வந்த எடப்பாடி பழனிசாமி அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் எதுவும் பேசாமல் புறப்பட்டுச் சென்றார்.

இதற்கிடையில் இரவு 10:15 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "2026இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்" என தமிழிலும், ஹிந்தியிலும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லியில் நேற்று 8 மணி நேரத்தில் 3 கார்களை மாற்றி மாற்றி பயணித்த விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது. அந்த ஒவ்வொரு கார்களும் பல லட்சங்களில் தொடங்கி கோடிகளில் விலை. குழப்பத்தை உருவாக்க இந்த மாஸ்டர் பிளானை பயன்படுத்தி உள்ளார் எடப்பாடி பழனிசாமி. விமான நிலையத்தில் இருந்து டெல்லி அதிமுக அலுவலகத்துக்கு சென்றபோது கருப்பு நிற இன்னோவா காரை பயன்படுத்தினார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டுக்கு உள்ளே சென்றபோது பயன்படுத்தியது வெள்ளை நிற ஆடி காரில் சென்றார். அமித் ஷா வீட்டை விட்டு வெளியே வரும்போது அதே காரை பயன்படுத்தாமல்  கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் காரில் வெளியேறிச் சென்றார் எடப்பாடி பழனிசாமி. இந்த புத்தம்புதிய பிரிட்டிஷ் இறக்குமதியான பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் காரின் விலை ரூ.5.25 கோடி.

 

எடப்பாடி பழனிசாமி அமித் ஷா வீட்டிற்கு வந்த வெளியில் வெகுநேரமாக காத்திருந்த செய்தியாளர்கள் அவர் சென்ற ஆடி காரையே எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் அவர் வெளியேறும்போது  நீல நிற பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் காரில் விருட்டென கிளம்பி விட்டார். செய்தியாளர்கள் அனைவரும் ஆடி காரையே பார்த்தபடி இருந்தனர். செய்தியாளர்களை தவிர்ப்பதற்காகவே எடப்பாடி மாஸ்டர் ப்ளான் போட்டு வேறொரு காரில் வெளியேறிச் சென்று இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

 

''அது 5 கோடி பென்ட்லி கார், ஒரு விவசாயியின் மகனுக்கு மிக அதிகம்'' என சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: திமுகவை வீழ்த்த வேண்டும்.. எல்லோரும் ஓரணியில் வரலாம்.. அதிமுக கூட்டணிக்கு அண்ணாமலை கிரீன் சிக்னல்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share